• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சன் டிவி, ஜெயா டிவி பாக்காதீங்கோ: வி.எச்.பி.

By Staff
|

சென்னை:

சன் டிவியும் ஜெயா டிவியும் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவதாகவும், அதை பார்க்கக்கூடாது என்றும் விஸ்வ இந்துபரிஷத்தின் அகில உலக துணைத் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளனர்.

ஜெயேந்திரர் கைதுக்கு எதிராக நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

நான் காஞ்சி மடத்திற்கு சென்று வரும்போதெல்லாம் அங்கே திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வந்துபோவதைப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு அவர்கள் எல்லோரும் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்கின்றனர்.

கருணாநிதி கைதின்போது, அதிமுக அரசு கலைக்கப்படாமல் அதைக் காப்பாற்றியவர் ஜெயேந்திரர். இப்போது ஜெயலலிதா போலிவேஷம் போடுகிறார். இந்துக்களுக்கு விரோதமான பத்திரிக்கைகளை நாம் இனி படிக்கக்கூடாது. சன் டிவி, சன் நியூஸ் மற்றும்ஜெயா டிவியையும் பார்க்கக்கூடாது.

ஜெயேந்திரருக்கு ஜாமீன் கிடைக்காவிட்டால் 5,000 பேர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும்.அப்போது நம்மை அடித்தால் அடிவாங்க வேண்டும். முடிந்தால் திருப்பி அடிக்க வேண்டும் என்றார்.

எச்.ராஜா பேச்சு:

இக் கூட்டத்தில் பா.ஜ.க. எம்எல்ஏ ராஜா பேசுகையில்,

திமுக தலைவர் கருணாநிதி காஞ்சி மடத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாகக் கூறினார். இந்தப் போராட்டத்தைசமாளிக்க தைரியமில்லாத முதல்வர் ஜெயலலிதா இந்துக்கள் முதுகில் குத்தி விட்டார்.

அரசாங்க வழக்கறிஞர் காஞ்சி சங்கராச்சாரியாரை கிரிமினல் என்று சொல்கிறார். இவர் காசு கொடுத்து வேலைக்குச் சேர்ந்தாராஎன்று சந்தேகம் வருகிறது. இவரைத் தமிழக அரசு மாற்றவேண்டும்.

ரெளடிகள் கொடுத்த வாக்குமூலத்தால் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.அப்படியானால் ஜெயலட்சுமி கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அமைச்சர்களை கைது செய்யாதது ஏன்?

கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அவரை அவரது காரில் போக அனுமதித்த போலீஸார், ஜெயேந்திரரை அவரது காரில்போக அனுமதிக்காதது ஏன்?

இந்துக்களை அழிக்கும் முயற்சியில் திராவிடக் கட்சிகள் ஈடுபட்டிருக்கின்றன என்றார்.

விஎச்பி பந்த்: பால் தாக்கரே கிண்டல்

இந் நிலையில், சங்கராச்சாரியார் கைதை எதிர்த்து இரு நாட்களுக்கு முன் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய பந்த் பெரிய ஜோக் எனசிவசேனைத் தலைவர் பால் தாக்கரே கிண்டலடித்துள்ளார்.

இந்த பந்த்துக்கு யாருடையே ஆதரவும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அவர், இது போன்ற வேலைகளை இனி விஎச்பிசெய்யக் கூடாது என்று கூறியுள்ளார்.

விஎச்பி அடுத்த போராட்டம்:

இந் நிலையில் ஜெயேந்திரரை விடுதலை செய்யக் கோரி வேலூர் சிறை முன்பு தினமும் 1,000 பேர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விஎச்பி அறிவித்துள்ளது. நாளை முதல் இந்த உண்ணாவிரத போராட்டம் தொடங்குகிறது.

இது தொடர்பாக வி.எச்.பியின் அகில உலக துணைத் தலைவர் வேதாந்தம், மாநில பொதுச் செயலாளர் நாராயணசாமி ஆகியோர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜெயேந்திரரின் விடுதலைக்காக தினமும் 1,000 பேர் வேலூர் சிறைவாசலில் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்திக்க வேண்டும்.இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 1,000 பக்தர்கள் தினமும் வர வேண்டும்.

சோதனை மிகுந்த இந்த நேரத்தில் எந்த பாகுபாடும் இன்றி, அனைத்து இந்துக்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டவை இந்த போராட்டத்தில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X