இந்தியாவில் பாக். பிரதமர்: மன்மோகனுடன் சந்திப்பு
டெல்லி:
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் அப்துல் அஜீஸ் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
13 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்த முதல் பாகிஸ்தான் பிரதமர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்மோகன் சிங்கைப் போலவே அஜீசும் ஒரு பொருளாதார நிபுணரே. நேற்று தனது மனைவி ருக்ஷானாவுடன் டெல்லி வந்தஅஜீஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி ஆகியோருடனும் பேச்சு நடத்தினார்.
அத்வானியை பாகிஸ்தானுக்கு வருமாறும் அவர் அரசின் சார்பில் அழைப்பு விடுத்தார். காஷ்மீரில் படைக் குறைப்பு உள்ளிட்டபல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ள நிலையில் அஜீசின் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் அவரை பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யரும் சந்தித்துப் பேசினார். ஈரானியில் இருந்து பாகிஸ்தான்வழியாக குழாய் மூலம் இயற்கை எரிவாயுவைக் கொண்டு வரும் திட்டம் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
இந்த எரிவாயுக் குழாயை தனது நாட்டின் வழியாகச் செல்ல அனுமதித்தால் பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு 800 மில்லியன் டாலர்வரை ராயல்டி வருமானம் வரும் என்பதை அய்யர் அஜீசிடம் சுட்டிக் காட்டினார்.
முன்னதாக இந்தியாவின் மூத்த பத்திரிக்கை ஆசிரியர்களுடன் பேசி அஜீஸ், காஷ்மீர் பிரச்சனைக்கு அப்பால் நமது இரு நாட்டுஉறவுகள் வளர வேண்டும் என்றார்.
பின்னர் டெல்லியில் உள்ள பிரபர சூபி குரு ஹஜ்ரத் நிஜாமூதீன் அவுலியாவின் தர்ஹாவிலும் அஜீசும் அவரது மனைவியும்வழிபாடு நடத்தினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications