பிடிபட்ட கொலையாளி சின்னா ஆள்மாறாட்டம்?

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

சங்கரராமன் கொலை வழக்கில் கைதான சின்னா என்ற ரஜினிகாந்த் ஆள்மாறாட்டத்தில், தவறாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.

இந்த வழக்கில் சங்காச்சாரியாரையும் சேர்த்து 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அப்புவின் கார் டிரைவர் கதிரவனும், சின்னாவும்கடந்த 16ம் தேதி பிடிபட்டனர்.

இதில் சின்னா நீதிபதியிடம் முதலில் சங்கராச்சாரியாருக்கு எதிராக வாக்குமூலம் தந்துவிட்டு பின்னர் போலீசார் என்னை அடித்து, உத்ைதுவாயையும் உடைத்து துன்புறுத்தியதால் அவ்வாறு வாக்குமூலம் தந்தேன் என்று பல்டி அடித்தான்.

இந் நிலையில் இந்த சின்னா தான் கொலை வழக்கில் தேடப்பட்ட சின்னாவா அல்லது ஆள்மாறாட்டத்தில் போலீசார் தவறாக இவனைக்கைது செய்துவிட்டனரா என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.

உண்மையான சின்னா தலைமறைவாக இருப்பதாகவும், அவனுக்குப் பதிலாக லோக்கல் ரெளடியான சின்னாவைக் கைது செய்து வைத்துக்கொண்டு இவன் தான் சின்னா, இவன் தான் கொலையாளி என போலீசார் தவறாக வழக்கு நடத்துவதாக விவரமறிந்தவர்கள் சந்தேகம்எழுப்புகின்றனர்.

ஆனால் போலீசாரோ, முதலில் லோக்கல் ரவுடி சின்னாவை தவறாக நாங்கள் பிடித்தது உண்மை. ஆனாஸ் பின்னர் அவன் இந்தக்கொலையில் தொடர்புடைய சின்னா இல்லை என்று தெரிந்ததால், அவனை விட்டுவிட்டு உண்மையான குற்றவாளியான சின்னா என்றரஜினியைப் பிடித்துவிட்டோம்.

இப்போது கிளப்பப்படும் சந்தேகங்கள் வழக்கை திசை திருப்புவதற்காகக் கூறப்படும் தகவல் என்கின்றனர்.

இந்தக் குழப்பம் போதாது என்று, நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படும்போதெல்லாம் சின்னா துண்டால் முகத்தை வேறு மூடிக் கொண்டுதான் வருகிறான். இதனால், இந்த விஷயத்தில் மகா குழப்பம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+