வீரப்பன்: ஜெவுக்கு எதிரான மனு தள்ளுபடி
டெல்லி:
வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப் படையினருக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசுகளை அள்ளிக் கொடுத்ததை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
வீரப்பனையும், அவனது கும்பலையும் சுட்டு வீழ்த்திய தமிழக அதிரடிப் படையினர் 752 பேருக்கும் ரூ.50 கோடி மதிப்பில் வீட்டு மனை, ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பதவி உயர்வை ஜெயலலிதா வழங்கினார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்தார்.அந்த மனுவில், அரசு பதவியில் இருப்பவர்களுக்கு இத்தகைய பரிசுப் பொருட்களை ஒரு சட்டம் இயற்றி அதன் மூலமே வழங்க முடியும்.
வெறுமனே உத்தரவு பிறப்பிப்பதன் மூலம் பரிசுகள் வழங்க முடியாது. அவ்வாறு வழங்குவது அரசியமைப்பு விதிகளுக்கு முரணானது.எனவே அதிரடிப்படையினருக்கு பரிசுகள் வழங்கியதை சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சபர்வால் மற்றும் நெளலேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனுதாரர் கூறிய விவரங்கள் யாவும்தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவையாகும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!












Click it and Unblock the Notifications