துரைமுருகனுக்கு நீதிபதி எச்சரிக்கை
வேலூர்:
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகனுக்கு வேலூர் குற்றவியல் நீதிபதிகடும் கண்டனம் தெரிவித்தார்.
துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரூ. 3 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார்வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால் குற்றப் பத்திரிக்கையின் நகல்கள் இன்னும் துரைருகன்உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த நகலைப் பெற துரைமுருகன் நீதிமன்றத்துக்கு வராமல் இருப்பதே இதற்குக் காரணம்.
இந் நிலையில் இன்று மீண்டும் அனைவரும் மொத்தமாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ராஜகோபால் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி துரைமுருகனின் மனைவி சாந்தகுமாரி, மகன் கதிர் ஆனந்த், மருமகள் சங்கீதா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.ஆனால் துரைமுருகன் மட்டும் வரவில்லை. அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக நீதிபதியிடம் துரைமுருகனின் வழக்கறிஞர்தெரிவித்தார்.
இதை அரசு வழக்கறிஞர் மிகக் கடுமையாக ஆட்சேபித்தார். இதோடு 8 முறை துரைமுருகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு விட்டது.இதுவரை அவர் கோர்ட்டுக்கு வரவில்லை. வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் துரைமுருகன் கோர்ட்டுக்கு வராமல்உள்ளார் என்றார்.
இதையடுத்து துரைமுருகனுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம்அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications