பாமகவின் தமிழிசைப் பெருவிழா
சென்னை:
பாமக நிறுவனர் ராமதாஸ் நிறுவியுள்ள பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் சென்னையில் வரும் 8,9 மற்றும் 10 ஆகியதேதிகளில் தமிழ்ப் பண்ணிசைப் பெருவிழா நடைபெறுகிறது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் மதுரை,திருநெல்வேலி, கோவை, சீர்காழி, வேலூர், சேலம் ஆகிய ஊர்களில் பண்ணிசைப் பெருவிழா தலா 2 நாட்கள் நடந்தது.
தமிழிசை பாடல்கள் குறித்த ஆய்வரங்கம், இசையரங்கம் ஆகியவை அதில் இடம் பெற்றன. சென்னையில் நிறைவுப் பெருவிழாநடைபெறவுள்ளது.
குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தமிழிசை சங்கத்தின் தலைவருமான பு.ரா.கோகுலகிருஷ்ணன் விழாவை தொடங்கிவைக்கிறார்.
திருவருட்பா- திவ்விய பிரபந்தம்:
8ம் தேதி சங்கத தமிழ் மற்றும் சிலப்பதிகாரப் பாடல்கள், திவ்வியப் பிரபந்தம், கோபாலகிருஷ்ணன் பாரதியார், மாயூர் வேதநாயகம்பிள்ளை பாடல்கள், திருவருட்பா, தேவாரம், திருவாசகம், சீர்காழி தமிழிசை மூவர் பாடல்கள் ஆகியவை குறித்த ஆய்வரங்கம்,இசையரங்கம் நடக்கும்.
பட்டினத்தார் பாடல்கள்:
9ம் தேதி திருவாய் மொழி, ஆண்டாள் பாடல்கள், இஸ்லாமிய இசைப் பாடல்கள், சித்தர் பாடல்கள் குறித்தும், 19ம் நூற்றாண்டு தமிழிசைப்பாடல்கள், தாயுமானவர், பட்டினத்தார் பாடல்கள், காவடிச் சிந்து, கிறிஸ்தவ இசைப் பாடல்கள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்உள்ளிட்டவை குறித்து ஆய்வரங்கும், இசையரங்கும் நடைபெறும்.
திருப்பல்லாண்டு:
10ம் தேதி தண்டபாணி தேசிகர் பாடல்கள், காரைக்கால் அம்மையார், சேக்கிழார் பாடல்கள், திருப்புகழ், குறவஞ்சி, பிள்ளைத் தமிழ்,திருக்குறள், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு தமிழிசைப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் குறித்த ஆய்வரங்கும், இசையரங்கும்நடத்தப்படும்.
இந்த இசையரங்கு, ஆய்வரங்குகளில் முன்னணி தமிழிசைக் கலைஞர்கள், அறிஞர்கள் பங்கேற்கிறார்கள். நிறைவாக அறக்கட்டளைநிறுவனர் ராமதாஸ் உரையாற்றுகிறார் என்று கூறியுள்ளார் ஜி.கே.மணி.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications