கலாமிடம் அறிக்கை: பாஜக கூட்டணி முடிவு
டெல்லி:
வேலூர் சிறையில் ஜெயேந்திரரை தமிழக அரசு நடத்தும் முறைகள் குறித்து நேரில் ஆராய்ந்து, அது குறித்து குடியரசுத் தலைவர்அப்துல் கலாமிடம் அறிக்கை அளிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது.
சிறையில் ஜெயேந்திரரை சந்திக்க பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அடங்கிய குழு இந்த வாரம்வேலூர் வருகிறது. சிறையில் ஜெயேந்திரரை தமிழக அரசு நடத்தும் முறை, மனித உரிமைகள் மீறப்படுகிறதா, முறையான மருத்துசிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து ஜெயேந்திரரிடம் விசாரணை நடத்துகிறது.
ஜெயேந்திரரின் பதில்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு அறிக்கையை தயாரித்து கலாமிடம் அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக முடிவெடுத்தபோதிலும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் இன்னமும் அக் கட்சி கலந்துஆலோசிக்கவில்லை. பாஜக மக்களவைத் துணைத் தலைவர் மல்கோத்ரா கூறுகையில், கூட்டணியின் அமைப்பாளர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் டெல்லி வந்ததும் இது குறித்து முடிவு எடுக்கப்படும்.
குழுவில் 4 அல்லது 5 பேர் இடம் பெறுவார்கள். ஜெயேந்திரர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் தினமும் குரல் எழுப்புவோம்.பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து தக்க பதில் வரும்வரை இதைத் தொடர்வோம் என்று தெரிவித்தார்.
ஜெயேந்திரரை உமா பாரதி சந்தித்தது பாஜக சார்பிலா என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications