ஜெவின் வீராண விரிவாக்க திட்டம்
சென்னை:
சென்னை நகருக்கு தினமும் 150 மில்லியன் லிட்டர் கிடைக்க வழி செய்யும் வீராணம் விரிவாக்கத் திட்டத்துக்கு முதல்வர்ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
சட்டமன்றத் தேர்தலை விரைவில் நடத்தும் முடிவுக்கு ஜெயலலிதா வந்துவிட்டதாகத் தெரிகிறது.
சமீபத்தில் தனது ஆண்டிப்பட்டி தொகுதி அடங்கிய தேனி மற்றும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சுற்றுப் பயணம்மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதா இப்போது பெரம்பலூர், கிருஷ்ணகிரிமாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பெரம்பலூரில் ரூ. 300 கோடியில் வீராணம் விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அவர் துவக்கிவைத்தார்.
இத் திட்டத்தின்படி கொள்ளிடத்தில் 6 ராட்சத ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்படும். இங்கிருந்து காவிரி நீர் மற்றும் நிலத்தடி நீர்குழாய்கள் மூலம் பம்ப் செய்யப்பட்டு சேத்தியாதோப்புக்குக் கொண்டு வரப்படும். அங்கு வீராணம் குழாயுடன் இந்தக் குழாய்கள்இணைக்கப்படும்.
![]() |
இதன்மூலம் சென்னைக்கு தினந்தோறும் 150 மில்லியன் லிட்டர் கூடுதலாகக் கிடைக்கும்.
இதே விழாவில் பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகளையும் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். பல கோடி மதிப்புள்ள அரசுநலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம், செய்தித்துறை அமைச்சர் கே.ஏ.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் முதல்வர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.
அங்கிருந்து திருச்சி செல்லும் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டு இரவுதிருச்சியில் தங்குகிறார்.
நாளை ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி செல்கிறார். அங்கு தனி கலெக்டர் அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டில் பல்வேறுவளர்ச்சித் திட்டப் பணிகளைத் துவக்கி வைக்கிறார்.
அங்கிருந்தபடியே ஒசூரில் மலர்க் கண்காட்சியை டெலிகான்பரன்சிங் மூலம் துவக்கி வைக்கும் ஜெயலலிதா நாளை மாலைசென்னை திரும்புவார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி இரு மாவட்டங்களிலும் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த இரு மாவட்டங்களைத் தொடர்ந்து விரைவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜெயலலிதாவின் சுற்றுப் பயணம்இருக்கும் என்று தெரிகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications