துபாய்: 2 தமிழக தொழிலாளர்கள் தற்கொலை
துபாய்:
துபாயில் கடந்த இரு வாரங்களில் இரு தமிழர்கள் உட்பட 3 இந்தியத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் ஆறுமுகம் வெங்கடேசன் என்ற தமிழர் சம்பள பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் செல்வக்குமார் (25) என்பவரும் அறையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்சென்னையைச் சேர்ந்தவர்.
செல்வக்குமார் தற்கொலை குறித்து அவருடன் வசித்து வந்த பாபு கூறுகையில், குமார் ஒரு வருடத்திற்கு முன்பு கட்டடத் தொழிலாளியாகதுபாய் வந்தார். மிகவும் நல்ல மனிதர். மிக அன்பானவர்.
8 மாதங்களுக்கு முன்பு, இந்தியாவில் குமாரின் சகோதரி தனது கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.அதிலிருந்து குமார் மிகவும் வருத்தத்துடன் இருந்து வந்தார். யாருடனும் பேசுவதில்லை. தனிமையிலேயே இருந்து வந்தார்.
இந் நிலையில் நாங்கள் தங்கியிருந்த அறைக்குள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் வேலை பார்த்தநிறுவனத்துடன் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.
இதே போல தாமஸ் அண்டனி (30) என்ற அக்கவுண்டன்ட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டதினத்தன்று இந்தியா திரும்புவதாக இருந்தது. இருவரும் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
-
பூடானில் 5.6 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்! அலறியடித்து ஓடிய மக்கள்.. இந்தியா, சீனாவிலும் அதிர்வுகள் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications