விடாத விமர்சனம்.. ஒரு வழியாக வாயைத் திறந்த விஜய்.. ராகுல் காந்தி கைதுக்கு கடும் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைதுக்கு முதல்வர் விஜய் கருத்து தெரிவிக்காமல் இருந்தது பெரிய சர்ச்சையானது. தொடர் விமர்சனங்களை தொடர்ந்து தற்போது விஜய் முதல்முறையாக இந்த விவகாரத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று பெரும் போராட்டம் நடைபெற்றது.

CM Vijay condemns

பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க்கை நோக்கி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் எதிர்காலத்தைப் கேள்விக்குறியாக்கிய நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தலைவர்கள் தீவிர முழக்கங்களை எழுப்பினர்.

உயர் பாதுகாப்பு மண்டலமான பிரதமர் இல்லத்தின் அருகே போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக் கூறி, டெல்லி காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தியது. இதனால் காவல்துறைக்கும் தலைவர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளுவும் காரசார விவாதமும் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

கைது நடவடிக்கைக்குப் பின் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, "மாணவர்களின் நீதிக்கான இந்த அறப்போராட்டம் எக்காரணம் கொண்டும் நிற்காது.. மத்திய அரசு எவ்வளவு அடக்குமுறையைக் கையாண்டாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்" என்று உறுதியாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் விஜய் கண்டனம்

இந்த நிலையில் தவெக தலைவர் முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.

நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.

நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.

நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம், என்று விஜய் கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+