செய்தி சுதந்திரத்துக்கு எதிரான பிரிவு: த ஹிண்டு வழக்கு
டெல்லி:
பத்திரிக்கைகளுக்கு எதிராக அவதூறு வழக்குகளைத் தொடர வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 499வது பிரிவுக்கு எதிராகஇந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் ரவி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
சட்டசபையின் உரிமையை மீறி செய்தி வெளியிட்டதாகக் கூறி கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி சபாநாயகர் காளிமுத்து, இந்து ஆங்கிலநாளிதழின் ஆசிரியர் மற்றும் பத்திரிக்கையாளர்கள், பதிப்பாளர், முரசொலி ஆசிரியர் ஆகியோரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து இந்து நாளிதழ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் கைது நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்தது. மேலும் தனது மனுவில் சட்டமன்றத்தின் அதிகார வரம்புகள் குறித்த அரசியல் சட்ட கேள்விகளை இந்துகிளப்பியது.
இதையடுத்து இந்த வழக்கு கடந்த 10ம் தேதி 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டு விரிவாகவிசாரிக்கப்படவுள்ளது.
இந் நிலையில் இந்து நாழிதள் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தாக்கல் செய்து மூத்தவழக்கறிஞர் ஹரீஸ் சால்வே பேசுகையில்,
அன்றாட செய்திகளை பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை பத்திரிக்கைகளுக்கு இருக்கிறது. ஆனால் இந்த பொது நலமுயற்சிக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 499வது பிரிவு இடையூறாக உள்ளது என்றார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சபர்வால், நீதிபதி தர்மாதிகாரி ஆகியோர் கூறுகையில்,
பத்திரிக்கைகளின் கருத்துச் சுதந்திரம் நியாயமமானது தான். ஆனால், சமீபத்தில் நடிகை கரீனா கபூர் தொடர்பாக பத்திரிக்கைகளிலும்டிவியிலும் வெளியான படங்களும், வீடியோவும் எந்த வகையில் மக்களுக்கு நல்லதைச் செய்யும்? என்று நீதிபதிகள் கேட்டனர்.
(கரீனாவும், அவரை விட மிக இளைய நடிகரான சொகைல் கானும் மிக இன்டிமேட்டாக மெளத் கிஸ் கொடுத்துக் கொண்ட காட்சியையாரோ வீடியோவாக எடுத்துத் தர அதை மிட்-டே நாளிதழும் தனியார் தொலைக் காட்சிகளும் வெளியிட்டன).
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மீடியா எதை வேண்டுமானலும் செய்யவது சரியல்ல என்றும் நீதிபதிகள் கூறினர். அதே நேரத்தில் இந்தமனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும் அறிவித்தனர்.
-
பூடானில் 5.6 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்! அலறியடித்து ஓடிய மக்கள்.. இந்தியா, சீனாவிலும் அதிர்வுகள் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications