ஜெவுக்கு கருணாநிதி கிண்டல் பதில்
சென்னை:
சுயநலக்காரர்களுக்கு தமிழகத்தில் பஞ்சமே இல்லை என்று தன் கதை மூலமாக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்திற்கு சிறப்பு முதன்மைத்தகுதியை வழங்கியிருக்கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கிண்டலடித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் ஜெயலலிதா ஒரு கதை சொன்னார். சிலந்தி இழையைப் பிடித்து மேலே ஏறியவன், பாதிவரை வந்துவிட்ட பிறகு கீழே பார்க்கும்போது, அவனைப் போலவே பல பேர் மேலே வந்து கொண்டிருப்பதைக் கண்டான் என்று கூறினார்ஜெயலலிதா.
வீரப்பனைப் பிடித்தது நான்தான், புதிய வீராணம் திட்டத்தைக் கொண்டு வந்தது நான்தான், ஜெயேந்திரரைக் கைது செய்தது நான்தான்,தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டுவது நான்தான், இதை மற்றவர்கள் கொண்டாடுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்பதுபோல் இக்கதை உள்ளது.
சுயநலக்காரர்களுக்குத் தமிழகத்தில் பஞ்சமே இல்லை. அவர்களிடம் பொறாமைக்கும் பஞ்சமே இல்லை என்று கூறி தமிழகத்துக்கு சிறப்புமுதன்மைத் தகுதியை ஜெயலலிதா வழங்கியிருக்கிறார்.
இப்படி ஜெயலலிதா முழங்கியது பாரதியார் உயிரோடு இருந்து அவர் காதில் விழுந்திருக்குமேயானால், செந்தமிழ் நாடெனும் போதினிலேதுன்பத் தேள் வந்து கொட்டுது காதினிலே என்று கண்கலங்க கவிதை பாடியிருப்பார் என்று கருணாநிதி கூறினார்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications