சந்திரிகாவுடன் நார்வே தூதர் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

Eric Solheim and Mahinda

இலங்கை பிரதமர் மகிந்தாவை சந்தித்துப் பேசும் நார்வே தூதர் எரிக் சோல்ஹைம்

அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சியின் ஒரு கட்டமாக இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைநார்வே அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுடன் எரிக் சோல்ஹைம் நடத்தியபேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

அதனையடுத்து இலங்கைப் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதை இலங்கையில் உள்ள நார்வேதூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ஷ்டி டிராம்ஸ்தல் நிருபர்களிடம் கூறினார்.

இந் நிலையில் சந்திரிகாவைச் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து சோல்ஹைம் ஆலோசனை நடத்தினார்.அப்போது போர் நிறுத்த உடன்பாட்டைக் கடைப்பிடிப்பதிலும், அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வதிலும் புலிகள் உறுதியாகஇருப்பதாக சோல்ஹைம் சந்திரிகாவிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் உடனிருந்தார்.

ஆந்த்ராக்ஸ் பீதி:

இதற்கிடையே கொழும்பில் உள்ள நார்வே தூதரகத்துக்கு தபாலில் பவுடர் வந்தது. அது ஆந்த்ராக்ஸ் பவுடராக இருக்குமோ என்றுஅஞ்சப்பட்டது. அதனையடுத்து அந்த பவுடர் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தூதரகத்துக்கு முழு பாதுகாப்பு அளிக்க சந்திரிகாஉத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+