ஜெயேந்திரர்- மத்திய அரசு ஒதுங்க கூடாது-: அத்வானி
கோவை:
ஜெயேந்திரர் கைது விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்று கூறி மத்திய அரசு ஒதுங்கக் கூடாது என்று பாஜக தலைவர் அத்வானிகூறினார்.
பாலக்காட்டில் நடந்த கேரள மாநில பாஜக செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் வழியில் கோவை விமான நிலையம் வந்தஅவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜெயேந்திரர் மீதான வழக்கில் சட்டம் தன் பணியைச் செய்யும் என்றாலும், இந்து மடாதிபதியை மரியாதையுடன் நடத்த வேண்டும்.ஆனால், தமிழக அரசு அவருக்கு உரிய மரியாதையை வழங்காமல், ஒரு குற்றவாளியைப் போல நடத்துகிறது.
திமுக தலைவர் கருணாநிதி ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், நான் முதல்வராக இருந்திருந்தால் ஜெயேந்திரர் மீது இந்தப் புகார்கள்வந்திருக்காது; உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யாமல் சங்கராச்சாரியாரைக் கைது செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம், இந்தப் பிரச்சினையில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கருணாநிதிகூடக் கருதுவதாகத் தோன்றுகிறது. எனவே, இந்தவழக்கு குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
இதில் தனக்கு தொடர்பில்லை என்று மத்திய அரசு ஒதுங்கிக் கொள்ள முடியாது.
அணு சக்தியை விரும்பும் நாடுகள் இந்தியாவைப் பின்பற்ற வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் ஒருவெளிநாட்டுப் பத்திரிகைக்குப் பேட்டி அளித்துள்ளார்.
எந்தவொரு வெளியுறவுத் துறை அமைச்சரும் நமது நாட்டின் பாதுகாப்புத் திட்டத்தை இவ்வளவு கேவலப்படுத்தியதில்லை. இதற்குபிரதமர் மன்மோகன் சிங் அவசரமாக விளக்கம் அளித்துள்ளார். அணுசக்தித் திறனை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அதிகாரம்படைத்த நாடுகள் நெருக்கடி கொடுத்தால், இந்த அரசு அதற்குப் பணிந்துவிடும் என்றே தோன்றுகிறது என அத்வானி கூறினார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications