வெள்ளம்: ஜெவுடன் மத்திய குழு சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான அளவுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள மத்தியஅரசு தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என்று மத்திய குழுவினரிடம் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.

வெள்ள சேதங்களைப் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் மிஸ்ரா தலைமையிலான நிபுணர் குழு தமிழகம்வந்தது.

இந்த குழுவினர் இருபிரிவாக பிரிந்து காவிரி டெல்டா மாவட்டங்களிலும், விழுப்புரம், கடலூர் மாவட்டத்திலும் கடந்த இரண்டுதினங்களாக வெள்ளச்சேதங்களை பார்வையிட்டனர்.

வெள்ளச்சேதத்தை பார்வையிட்ட பின்னர் மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் சென்ற இடங்களில் விவசாயிகள், பொதுமக்கள் கூறிய கருத்துக்களை குறித்துக் கொண்டோம். எங்களால் ஒவ்வொருகிராமத்திற்கும் நேரடியாக செல்ல முடியாவிட்டாலும், வெள்ள சேதத்தை மதிப்பிடுவதற்காக சில கிராமங்களை தேர்வு செய்து ஆய்வுசெய்தோம்.

கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக வயல்கள், வீடுகள், சாலைகள் ஆகியவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தபாதிப்புகளின் தன்மையை நாங்கள் உணர்கிறோம் என்று கூறினார்.

ஜெவுடன் சந்திப்பு:

மத்திய நிபுணர் குழுவினர் இன்று சென்னை திரும்பினர். அங்கு ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.

அப்போது அவர்களிடம் தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக் கூறிய ஜெயலலிதா,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான அளவுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள மத்தியஅரசு தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் 64.32 கோடி நிவாரண நிதியுதவி அளித்துள்ளதால் தமிழக அரசின் இயற்கை அழிவு நிவாரண நிதி காலியாகிவிட்டதைச் சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, இந்த நேரத்தில் மத்திய அரசின் உதவியை நாடுவதைத் தவிர மாநில அரசுக்கு வேறு வழியில்லை என்றும் கூறினார்.

2003-04ம் ஆண்டில் மத்திய அரசு அளித்த வறட்சி நிவாரண நிதி எதிர்பார்க்கப்பட்ட அளவை விட மிகக் குறைவு என்று கூறியஜெயலலிதா, கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து பாதிப்படைந்து வரும் விவசாயிகளுக்குத் தேவையான அளவு நிதி அளிக்க வேண்டும்என்று எடுத்துக் கூறினார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை:

இதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறை செயலாளர் நாராயணன் உள்ளிட்ட தமிழக அதிகாரிகளை மத்திய அதிகாரிகள் குழுவினர்சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரா கூறியதாவது:

வெள்ளத்தால் ஏராளமான பயிர்கள் நாசமடைந்துள்ளன. தமிழக அரசு ரூ.412 கோடி நிவாரணம் கேட்டுள்ளது. நாங்கள் இது குறித்துஆராய்ந்து இறுதி அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்.

எங்களுக்கு மேலும் சில தகவல்கள் தேவைப்படுகின்றன. அவற்றை சேகரிப்பதற்காக எங்கள் குழு உறுப்பினர் ஒருவர் மேலும் ஒரு நாள்இங்கு இருப்பார்.

வெள்ளத்தால் மாநிலம் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நிவாரண உதவி விரைவில் தரப்பட வேண்டும் என்றும் ஜெயலலிதாஎங்களிடம் கூறினார்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+