நாடார் பேரவை போராட்டம்: போலீஸ் துப்பாக்கி சூடு
சேலம்:
கள் இறக்க அனுமதிக்கக் கோரி தமிழ்நாடு நாடார் பேரவையினர் இன்று தமிழகம் முழுவதும் சாலை மறியல்நடத்தினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடுநடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நிாடு நாடார் பேரவை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று சாலை மறியல் போராட்டம்நடத்தப்பட்டது. ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் என்ற ஊரில் உள்ள ஊராட்சி அலுவலகம்எதிரே சாலை மறியலில் ஈடுபட 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
அப்போது அவர்களைக் கலைந்து போகுமாறு போலீஸார் கூறினர். ஆனால் யாரும் கலைந்து போகவில்லை.இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த நாடார் பேரவையினர் போலீஸார் மீதுகற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து நாடார்பேரவையினர் அலறியடித்தபடி கலைந்து சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவிலில் 1,000 பேர் கைது:
அதேபோல் நாகர்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாடார் மகாஜன சங்கம் மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து போலீஸார் விரைந்து வந்து கரிக்கோல்ராஜ் உட்பட சுமார் 1,000 பேரைக் கைது செய்தனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications