அய்யோ.. இந்தியை திணிக்கிறார்களே: ஜெ. ஆவேசம்
சென்னை:
தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் வேலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறையும் அத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பாலுவும்ஈடுபட்டிருப்பதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இதனை உடனே தடுத்து நிறுத்துமாறு பிரதமருக்கு அவர் கடிதமும்எழுதியுள்ளார்.
இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள மிகக் காட்டமான அறிக்கை விவரம்:
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை கிலோ மீட்டர் கற்களில் ஊர்ப் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டு வருவதைக் கண்டித்து ஒட்டுமொத்ததமிழ்நாடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.
இதனால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்தியில் பெயர் எழுதினால் யாருக்குப் புரியும்?
இந்தி தெரியாத தமிழ் மக்கள் தங்கள் சொந்த ஊரில், சொந்த மண்ணிலேயே அன்னியர் ஆக்கப்பட்டுள்ளது அநியாயம். இது இந்திஆதிக்கத்துக்கு வழி அமைத்துத் தரும் இழி செயல் அல்லவா?
தமிழகம் இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றி வரும் மாநிலம். இங்கே தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே பெயர்கள் எழுதப்படவேண்டும். இது தான் திராவிட இயக்கங்களின் லட்சியம்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது உலக நாடுகளையே உற்றுப் பார்க்க வைத்த யுகப் புரட்சி!. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றுதமிழுக்காக உயிர் தந்த தியாகிகளின் சாம்பலில் தான் 37 ஆண்டு தமிழக அரசியல் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.
1965ம் ஆண்டுக்குப் பின் ஆங்கிலமே கூடுதல் ஆட்சி மொழியாக இருந்து வருகிறது. ஆங்கிலம் இந்தக் கால கட்டத்தில் அகற்றப்படும்என்றோ, அல்லது இந்தி இந்த காலத்தில் மீண்டும் புகுத்தப்படும் என்றோ எந்தக் காலவரையரையும் வகுக்கப்படவில்லை. அந்தத் துணிச்சல்இன்னும் எவருக்கும் வரவில்லை.
இந் நிலையில் திடீரென இந்தி இப்போது தமிழகத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அப்படிச் செய்வதற்கு இந்திக்குக் கூட சொந்தமாகத்துணிச்சல் கிடையாது. அப்புறம், இந்தக் கொடுமை எப்படி நடந்தது?
அழையா விருந்தாளியாக இந்தி வந்தது எப்படி?. வரவில்லை. அழைத்து வரப்பட்டிருகிறது இந்தி. யாரால்? இந்தக் கேள்விக்கு விடைஎழுதும்போது என் இதயமே நொறுங்கிப் போகிறது.
யார் இந்திப் போராட்டத்தால் வாழ்வு பெற்றார்களோ, அவர்கள் தான் இந்தியை அழைத்து வந்திருக்கிறார்கள். யார் இந்திப்போராட்டத்தால் அரியணையில் அமர்ந்தார்களோ, அவர்களே இன்று இந்தியை அழைத்து வந்திருக்கிறார்கள்.
யார் இந்திப் போராட்டம் தந்த பிச்சையால் நான்கு முறை முதலமைச்சராக இருந்தாரே அவருடைய கட்சிக்காரர் இந்தியை அழைத்துவந்திருக்கிறார்.
ஆதிக்க இந்திக்கு ஆலவட்டம் வீசும் இந்தக் கொடுமையை அரங்கேற்றி இருப்பவர் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு.இவர் உத்தரப் பிரசேத்தில் உதித்து மத்தியப் பிரதேசத்தில் மாணவராக இருந்து பிகார் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராகதேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல.
இவர் தமிழர். அல்லது அப்படித் தன்னை சொல்லிக் கொள்கிறவர். செந்தமிழ்நாட்டில் தென் சென்னை தொகுதி மக்களால் எம்பியானவர்.
திராவிட இயக்கத்தின் மொத்தப் பரிமாணமும் நான் தான் என்று மார்தட்டிக் கொள்கிற திருவாளர் மு.கருணாநிதியின் சீடர். இவரது நேரடிமேற்பார்வையில் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையக் குழுமத்தின் நடவடிக்கை தான் இந்த இந்தித் திணிப்பு.
டி.ஆர்.பாலுவுக்குத் தெரியாமலா இந்த தெரு விளையாடல் நடந்துவிட்டது?
மத்திய அரசின் மையப் புள்ளியே நான் தான் என்ற மமதையில் இருக்கும் அவரது தலைவர் கருணாநிதிக்குத் தெரியாமல் இதுநடந்துவிட்டதா? சொல்ல முடியுமா அப்படி? டெல்லி அரசியலின் திருகுவிசையே திமுக தானே? இந்தியாவை ஆளும் காங்கிரஸ்கூட்டணியின் மூளையே கருணாநிதி தானே? அப்படித்தானே சொல்லப்படுகிறது.
கருணாநிதிக்குத் தெரியாமலா இங்கு இந்தி வந்துவிட்டது?. இவர்களைக் (திமுகவை) கேட்கிறேன்!. இவர்களது துடிபாடிகளை (பா.ம.க,மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ்) கேட்கிறேன்!.
தமிழ்ப் பாதுகாப்பு என்ற போர்வையில் தங்களுக்கு முகவரி தேடிக் கொள்ள முயன்று வரும் சில திடீர் தமிழ் அபிமானிகளைக் கேட்கிறேன்.எப்படி மனம் வந்தது இப்படி ஒரு வரலாற்றுப் பிழை செய்ய?
தமிழை மத்தியிலும் ஆட்சி மொழியாக்குவோம் என்று சொல்லித் தானே மத்தியில் ஆட்சியைப் பிடித்தீர்கள். மந்திரிகள் ஆனீர்கள். இன்றுமைல் கல்களில் தமிழைத் தூக்கி எறிந்துவிட்டு இந்தியைப் பதித்து காலத்தாலும் அழியாத பழியை கல்வெட்டில் பதித்துவிட்டீர்களே ஏன்?.என்ன காரணம்?
பதவி ஆசை.. அது தான் காரணம்.
தமிழ் எக்கேடு கெட்டால் என்ன? இந்தியில் தயவு இருந்தால் போதும் இந்தியாவை ஆளலாம், இது தானே உங்கள் எண்ணம்?
இந்தியைச் சுமந்து வந்து தமிழ்நாட்டுக் கற்களும் அதை சுமக்க வைத்துவிட்டார் திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு. ஆகா.. எத்தகைய வரலாற்றுச்சாதனை.. இது தான் திராவிட பாரம்பரியமா?
டெல்லியில் உள்ள தங்கள் கூட்டணியின் தலைமைக்கு (காங்கிரஸ்) அடி பணிந்து நடக்க பல வழிகள் இருக்கும்போது, இந்தியை தமிழகமக்கள் மீது திணித்துத் தான் தங்களது அடிமைத்தனத்தையும் விசுவாசத்தையும் திமுக காட்ட வேண்டுமா?
தன் அரசியல் ஆதாயத்துக்காக இந்திக்கு வால் பிடிக்க தொடங்கியிருக்கிறது திமுக. இந்த நிலை நீடித்தால் திமுகவுக்கு ஆள் பிடிக்க வேண்டியஅவசியம் ஏற்பட்டே தீரும். தமிழ் உணர்வுள்ள எந்த திமுக தொண்டனும் இதை தாங்கிக் கொள்ள மாட்டான்.
இறுமாப்பில் இருக்கும் இவர்களுக்கு தமிழ் மக்கள் மறக்க முடியாத பாடம் கற்பிப்பார்கள்.
இந்தி எந்தப் பேரனுக்குத் தெரியாவிட்டால் என்ன? தனது சொந்தப் பேரனுக்குத் தெரிந்திருக்கிறதே? அது போதாதா- தமிழகத்தில்இந்தியை ஸ்தாபிக்க என்பது தான் கருணாநிதியின் தீர்மானம் போலும்.
இவ்வாறு ஜெயலலிதா கேட்டுள்ளார்.
பிரதமருக்கு ஜெ. கடிதம்:
இந்த அறிக்கையையொட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தித் திணிப்பு என்பது மிக உணர்ச்சிகரமாக பிரச்சனை. இதனால் உடனே தமிழக நெடுஞ்சாலை மைல்கல்களில் இந்தியில் எழுதுவதை நிறுத்த பிரதமர் உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தில் எப்போதும் போல தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே மைல் கல்களில் எண்களும் பெயர்களும் எழுதப்பட வேண்டும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார்












Click it and Unblock the Notifications