ஜெயேந்திரர் காவல் மேலும் 15 நாள் நீட்டிப்பு
சென்னை & செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கிலும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரரின் சிறைக்காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு வழக்குகளிலும் முதல் குற்றவாளியான ஜெயேந்திரரின் சிறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.இதையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரது சிறைக் காவலை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
காஞ்சி சிறையில் வீடியோ கான்பரன்சிங் வசதி இல்லாததால் நீதிபதி உத்தமராஜன் செங்கல்பட்டுக்கு வந்தார். அங்குள்ளநீதிமன்றத்தில் இருந்தபடியே வேலூர் சிறையில் இருக்கும் ஜெயேந்திரருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். பின்னர்சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.
சைதாப்பேட்டையில்..
இதே போல சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரரின்நீதிமன்றக் காவல் ஜனவரி 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
சைதாப்பேட்டை 23வது நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி வீடியோ கான்பரன்சிங் மூலம் சங்கராச்சாரியாருடன்பேசிய பின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
கடந்த முறையும் வீடியோ கான்பரன்சிங் மூலமே ஜெயேந்திரரின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications