ரவி சுப்ரமணியத்தை மாட்டிவிடும் அப்பு!
காஞ்சிபுரம்:
போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் அப்பு தனது வழக்கமான பாணியிலேயே போலீசாருக்கு பதில் தந்து வருகிறான்.பெரும்பாலும் பிடிகொடுத்து பேசுவதில்லை.
ரவி சுப்பிரமணியத்தை தனக்கு நெருக்கமாக எல்லாம் தெரியாது என்று கூறியுள்ள அப்பு, சங்கர மடத்துக்கும் ரவிக்கும் இருந்ததொடர்புகளை போட்டு உடைத்துள்ளான்.
ரவியின் காதலியான ஹார்லிக்ஸ் சியாமளாவின் உறவுப் பெண் லீலா என்பர் தான் தன்னை சங்கர மடத்துக்கு அழைத்துச் சென்றதாகவும்,ஜெயேந்திரரிடம் அறிமுகம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளான்.
மேலும், ரவிக்கு சங்கர மட காண்ட்ராக்ட்கள் கிடைத்தன. இதன்மூலம் கோடிக்கணக்கில் அவருக்குப் பணம் வந்தது. இந் நிலையில்சங்கராச்சரியாரை சங்கரராமன் மிரட்டியது ரவிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம், இதனால் அவர் கூலிப் படை வைத்து கொலைசெய்திருக்கலாம்.
இதில் கூலியாட்களாக எனது ஆட்கள் கூட போயிருக்கலாம். அது குறித்து எனக்கு ஏதும் தெரியாது. நான் யாரையும் அனுப்பவில்லை.எனக்கும் இந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அப்பு ஓட்டு விழுந்த ரெக்கார்ட் மாதிரி கூறி வந்தான்.
ஆனால், இந்தக் கொலையில் அப்புவுக்கு உள்ள தொடர்புகள் குறித்து அவனது கார் டிரைவர் கதிரவன் மற்றும் கீலிப் படையைச் சேர்ந்தசின்னா ஆகியோர் தந்த வாக்குமூலங்களைக் காட்டி அப்புவை திணறச் செய்துள்ளது போலீஸ்.
மேலும் எந்தத் தேதியில், எங்கு வைத்து, யார் யார் சேர்ந்து கொலைத் திட்டத்தை தீட்டியது, பண பட்டுவாடா நடந்தது எப்படி போன்றவிவரங்களை போலீசார் ஆதாரங்களுடன் அப்புவிடம் எடுத்து வைத்து அவனது வயிற்றைக் கலக்கச் செய்துள்ளனர்.
அப்படியே அவனை அண்ணாநகர் ரமேஷ் மேட்டர் பக்கமாகத் திருப்பி அதிலும் பல விஷயங்கள் அவன் வாயிலிருந்து பிடுங்கப்பட்டுவருகின்றன.
அவனிடம் தொடர்ந்து நடத்தப்பட்டு விசாரணைகளில் போலீசாருக்கு நிறையவே விஷயங்கள் கிடைத்து வருவதாகத் தெரிகிறது.
இந் நிலையில் காட்டு பங்களாவில் அப்புவை சந்தித்த அவனது வழக்கறிஞர் புருஷோத்தமன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
போலீஸ் விசாரணைக்கு அப்பு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். போலீஸ் தரப்பிலிருந்தும் பெரிய அளவில் பிரச்சனை இல்லை.அவர்களும் அப்புவை நன்றாகவே நடத்தி வருகிறார்கள்.
விசாரணையின்போது, ரவி சுப்ரமணியத்திற்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அப்பு தெரிவித்துள்ளார். மேலும், இந்தவழக்கிற்கும் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அப்பு கூறியுள்ளார். அப்புவின் ஜாமீன் மனு தாக்கல் தொடர்பாக போலீஸ்விசாரணை முடிந்த பின்னர்தான் தீர்மானிக்கப்படும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications