நிவாரணம்: 4 நாடுகள் குழுவில் இந்தியா
டெல்லி:
![]() |
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஐ.நா. சபையின் நிவாரண உதவி அளிக்க உருவாக்கப்பட்டுள்ள குழுவில் இந்தியாவும்சேர்ந்துள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்ணா கூறியதாவது:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் காலின் பவல் ஆகியோர் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கிடம் இது தொடர்பாக பேசினார்கள்.
அப்போது மனிதாபிமான அடிப்படையில் இக் குழுவில் இந்தியா சேர்வதாக பிரதமர் தெரிவித்தார். இக்குழுவில் அமெரிக்கா,ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே இடம் பிடித்துள்ளன.
இருநாட்டுத் தலைவர்களின் பேச்சுக்குப்பின், அமெரிக்க வெளியுறவு துணை செயலாளர் மார்க் கிராஸ்மேன், ஆஸ்திரேலியா செயலாளர்டக்ளஸ் செஸ்டர், ஜப்பான் பொருளாதார கூட்டுறவு மையத்தின் டைரக்டர் ஜெனரல் சடோ மற்றும் இந்திய வெளியுறவுச் செயலாளர்ஷ்யாம் சரண் ஆகியோர் டெலிகான்பரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினர்.
நிவாரணப் பணிகளில் ஏற்படும் தொய்வை கண்டறியவும், நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும், மீட்புப் பணிகளை சரிவரநடத்தத் தேவையான வழிமுறைகளைக் கண்டறியவும் இந்த குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாளை வாஷிங்டனில் இந்திய, ஆஸ்திரேலியா, ஜப்பான் தூதர்கள் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னானுடன் ஆலோசனைநடத்துகிறார்கள்.
மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கவே இந்தக் குழு ஏற்படுத்தப்பட்டதாக ஜார்ஜ் புஷ் தெரிவித்தார். வெகு விரைவில் மற்ற நாடுகளும்இந்தக் குழுவில் இணையும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications