அனாதையான குழந்தைகளுக்கு சோனியா மறுவாழ்வு
டெல்லி:
![]() |
கடல் கொந்தளிப்பில் தங்களது பெற்றோரை இழந்த குழந்தைகளை ராஜீவ் அறக்கட்டளை தத்தெடுத்துக் கொள்ளும் என அந்தஅறக்கட்டளையின் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் சோனியா காந்தி பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிப்பார்த்து மக்களுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் கடல்கொந்தளிப்பில் பெற்றோரை இழந்து அனாதையாகி விட்ட குழந்தைகளை ராஜீவ் அறக்கட்டளை தத்தெடுத்து அவர்களது மறுவாழ்வுக்குஉதவும் என்று சோனியா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராஜீவ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தென் மாநிலங்களில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவ ராஜீவ் அறக்கட்டளைமுடிவு செய்துள்ளது. மேல்நிலைப்பள்ளி இறுதி வகுப்பு முடியும் வரை அந்தக் குழந்தைகள் கல்வி பயில்வதற்கான அனைத்துசெலவுகளையும் அறக்கட்டளை ஏற்கும்.
அதோடு இவர்களுக்கான மாதாந்திர பராமரிப்பு செலவு தொகையையும் அறக்கட்டளை தரும். மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ள அந்தக்குழந்தைகளை அவ்வப்போது நேரடியாக தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனைகளையும் அறக்கட்டளையினர் வழங்குவார்கள் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications