மறுபடியும் சுனாமி அபாயம்: மக்கள் அவசரமாக வெளியேற்றம்
சென்னை:
![]() |
மீண்டும் சுனாமி அலை வரலாம் என்ற மத்திய அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து காலியான மெரீனா கடற்கரை
தமிழகம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் சுனாமி தாக்க வாய்ப்பிருப்பதாக மத்திய அரசுஎச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
மத்திய அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழக கடலோரஙகளில் 2 கி.மீ. சுற்றுப் பகுதிகளில் இருந்து மக்கள் அவசர அவசரமாகவெளியேற்றப்பட்டனர். பல ஊர்களில் மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
கடந்த 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி தாக்குதலிலிருந்து இன்னும் தமிழகம் மீளாத நிலையில் இன்று காலை முதல் தமிழக கடல் பகுதியில்மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுப்பேட்டையில் நீர் நுழைந்தது:
சென்னை, நாகப்பட்டிணம், கன்னியாகுமரி, கடலூர், கல்பாக்கம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், தொண்டி, தங்கச்சிமடம் ஆகியகடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகமாகியுள்ளது. சென்னையில் கடல் நீர் மட்டம் அதிகரித்தால் கூவம் ஆற்றின் வழியாகபுதுப்பேட்டை பகுதியில் சில இடங்களில் கடல் நீர் நுழைந்தது.
ஆனாலும் பின்னர் அலை வேகம் குறைந்துவிட்டது. கூவத்தில் நீர் மட்டமும் தாழ்ந்தது. இருப்பினும் அதற்குள் மக்களிடையே பீதிபரவிவிட்டது. இந் நிலையில் மத்திய அரசின் எச்சரிக்கையும் வந்ததால் கடலோரப் பகுதிகளில் இருந்து மக்களை அதிகாரிகள் மிகஅவசரமாக வெளியேற்றினர்.
கடலோர மாவட்டங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், ராணுவத்தினர், தீயணைப்புப் படையினர், சமூக நல ஆர்வலர்கள்,அரசு ஊழியர்கள் ஆகியோரும் எச்சரிக்கப்பட்டனர். இதனால் பல இடங்களில் மீட்புப் பணிகளைக் கைவிட்டுவிட்டு கடலோரப்பகுதிகளில் இருந்து தூரமான பகுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டன. இதனால் பல இடங்களில் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டன.
சென்னை மெரீனாவில் அலுவலகங்கள் மூடல்:
மீண்டும் சுனாமி தாக்கலாம் என்ற அச்சத்தால் சென்னை கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மெரீனா கடற்கரையோரம்உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அங்கு பணியாற்றுவோர் அச்சத்துடன் அவசரமாக வீடுத் திரும்பினர்.
![]() |
ராணி மேரி உள்ளிட்ட கல்லூரிகள் மூடப்பட்டு மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
கடலோரப் பகுதிகளில் போலீசார் வாகனங்களில் மைக்குகளைக் கட்டிக் கொண்டு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் கடலோரப்பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களை அனுப்பிய மாநில அரசு அப் பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றி வருகிறது.
பல இடங்களில் மக்கள் தாங்களாகவே கடலோரங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஆம்புலன்கள்:
சென்னை முதல் குமரி வரை மக்கள் கிடைக்கும் வாகனங்களில் ஏறி கடலோரங்களை விட்டு தூரப் பகுதிகளுக்குச் செல்கின்றனர். இதனால்கடலோரப் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடிப் போய்விட்டன.
கடலோரங்களில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் பல இடங்களில் ஆம்புல்ன்ஸ்களை போலீசார் தயாராக நிறுத்தி வைத்துள்ளனர்.
தூத்துக்குடியில் பள்ளிகள் மூடல்:
தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள்,லாரிகளில் ஏறிச் சென்றவண்ணம் உள்ளனர். தூத்துக்குடி நகரில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன.
![]() |
தூத்துக்குடி துறைமுகத்தில் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஊழியர்கள் அனைவரும் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தால்பாதியிலேயே அவர்கள் வீடு திரும்பினர்.
கடலூரில் ஊரே காலி:
கடலூரில் வண்ணார்குப்பம், அண்ணாநகர் உள்பட 51 கடலோர கிராமங்களில் ஒருவர் கூட இல்லை. எச்சரிக்கை வந்த அரை மணிநேரத்தில் அனைவரும் வீடுகளை விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
கடலூர்- சிதம்பரம் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் டெம்போ வேன்கள், பஸ்கள், லாரிகளில் பாதுகாப்பான இடம் தேடிவிரைந்ததைப் பார்க்க முடிந்தது.
அணு உலை: மக்கள் வெளியேற்றம்
கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படிஎச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஜெ வருகை ரத்து:
இன்று நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருந்த முதல்வர் ஜெயலலிதாவின்பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுவிட்டது. தரையிறங்க இருந்த அவரது ஹெலிகாப்டர் உடனடியாகத் திரும்பிச் சென்றது.
நாகப்பட்டிணம் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளவர்களை மட்டும் ஜெயலலிதா சந்தித்தார்.
பிரதமர் வருகையும் ரத்து:
அதே போல பிரதமர் மன்மோகன் சிங்கின் இன்றைய நாகப்பட்டிணம் வருகையும் ரத்து செய்யப்பட்டது. சுனாமி பாதித்த பகுதிகளைஅவர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடலில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களையும் கடல் அலைகளைகளின் தீவிரத்தையும் கண்காணித்து வரும்வானிலை ஆய்வு மையமும் மத்திய பாதுகாப்பு அமைச்சகமும் மீண்டும் சுனாமி தாக்கக் கூடும் என்ற எச்சரிக்கையை விடுத்தன.
மத்திய அரசு எச்சரிக்கை:
இதையடுத்து உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூட்டினார். கூட்டத்திற்குப் பின்செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல், சிவராஜ் பாட்டீல் ஆகியோர்,தமிழகம், பாண்டிச்சேரி, அந்தமான், கேரளா மாநில அரசுகள் கடலோர கிராமங்களில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் வசிக்கும் மக்களை உடனேபாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து ஏற்பட்டு நில நடுக்கங்களை வைத்து வெளியிடப்படும் பொதுவான எச்சரிக்கை தான் இது. இதனால் மக்கள் பீதியடையத்தேவையில்லை மீண்டும் சுனாமி வந்தாலும் வரலாம் என்றனர்.
அமைச்சர்கள் இவ்வாறு கூறினாலும் மத்திய அரசின் எச்சரிக்கையை எந்த மாநிலமும் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. உடனடியாககடலோரப் பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கிவிட்டன. பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கோவாவிலும்ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் எந்தவிதமான இயற்கை சீற்றத்தையும் சமாளிக்கும் வகையில் ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை தயார்நிலையில் இருக்குமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புரளி.. பீதி:
இதற்கிடையே தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் அனைத்திலும் தண்ணீர் பெரும் அளவில் புகுந்துவிட்டதாகவும் நாகப்பட்டிணத்தைமீண்டும் சுனாமி தாக்கிவிட்டதாகவும் புரளி பரவியால் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்து போய்விட்டனர்.
கடல் கொந்தளிப்பை வைத்து ஒரு எச்சரிக்கை தான் விடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் பீதியில் மூழ்க வேண்டியதில்லை என்றும் மத்தியஅரசு கூறியுள்ளது. இருந்தாலும் இதை வைத்து பல இடங்களில் புரளிகள் கிளம்பியவண்ணம் உள்ளன.
சுனாமி வாய்ப்பில்லை: வானிலை மையம்இந் நிலையில் நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குனர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அவசர அறிக்கையில்,
தமிழக கடலோரப் பகுதிகளில் இப்போதைக்கு மீண்டும் சுனாமி தாக்கும் அபாயம் ஏதும் இல்லை. அந்தமான் பகுதியில் சிறிய அளவில்நிலநடுக்கம் தான் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
தொடர் நிலநடுக்கங்கள்:
இந்தோனேஷியாவின் சுமத்ரா, அந்தமான் பகுதியில் தொடர்ந்து கடலுக்கடியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால், கடல் கொந்தளித்துவருகிறது. சுமத்ராவில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்தால் தான் கடந்த ஞாயிறன்று சுனாமி அலைகள் உருவாயின.
இந் நிலையில் மீண்டும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் கடல் அலைகளின் உயரம் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே அந்தமானில் இதுவரை 390 உடல்களே மீட்கப்பட்டுள்ளன. ஆனால், பலியானவர்களின் எண்ணிக்கை 15,000த்துக்கும்அதிகம் என்று கூறப்படுகிறது. இன்று அந்தமானிலும் கடலின் அலைகளின் உயரம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து மக்கள்கடலோரங்களை விட்டு அடர்ந்த காடுகள் அடங்கிய உள் பகுதிகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.















Click it and Unblock the Notifications