சுனாமியில் சிக்கியவர்களை மீட்ட உயர்நீதிமன்ற நீதிபதி
சென்னை:
![]() |
சென்னையில் சுனாமி அலைகள் தாக்கியபோது பலரை மீட்டும், மீட்புப் பணிகளை முன்னின்று நடத்தியும் சப்தமில்லாமல் உதவிசெய்துள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.தினகரன்.
சென்னையில் பட்டினப்பாக்கம் பகுதியில்தான் முதல் சுனாமி அலை தாக்கியது. பட்டினப்பாக்கம் பகுதியில் ஏராளமான அரசு ஊழியர்கள்குடியிருக்கிறார்கள். அதேபோல, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வீடுகளும், அருகாமையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில்அமைச்சர்களின் வீடுகளும் உள்ளன.
கடந்த 26ம் தேதி சென்னை நகரில் சுனாமி தாக்கியது. சுனாமி தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் காலை 9.30 மணிக்கு தனதுகுடியிருப்பிலிருந்து கடற்கரைக்கு விரைந்தார் நீதிபதி பி.டி.தினகரன். அவருடன் குடியிருப்பில் வசித்து வரும் பல்வேறு நபர்களும்சென்றனர்.
பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் அலையில் சிக்கித் தவித்தவர்களை, தினகரனும், மீனவர்களும் சேர்ந்து மீட்கத் தொடங்கினர்.போலீஸாரும், மீட்புப் படையினரும் அப்போது வந்திருக்கவில்லை.
இதையடுத்து காவல்துறை ஆணையருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூடுதல் காவல்துறையினரை அனுப்புமாறு தினகரன்கேட்டுக் கொண்டார். தீயணைப்பு படையினருக்கும் அவரே தகவல் சொல்லி விரைந்து வரும்படி கூறியுள்ளார்.
போலீஸ் பற்றாக்குறை காரணமாக தினகரனே, மீட்புப் பணியை தலைமையேற்று மீனவர்களின் உதவியுடன் பலரையும் மீட்டுகாப்பாற்றியுள்ளார். வயதான ஆண்கள், பெண்களை தினகரனே தூக்கிக் கொண்டு வந்து பாதுகாப்பான பகுதியில் விட்டதாக சாந்தோம்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
முதல் அலை வந்து சென்ற பின்னர் பல உடல்கள் கரைக்கு மிதந்து வந்துள்ளன. அந்த உடல்களையும் தினகரன் மற்றும் மீனவர்கள் எடுத்துவந்து சாந்தோம் சாலையில் உள்ள பிளாட்பாரத்தில் வைத்துள்ளனர்.
இந்த சமயத்தில் 10.15 மணிக்கு இரண்டாவது அலை வந்துள்ளது. இந்த அலையில் தினகரன் உள்ளிட்ட சிலர் சிக்கிக் கொண்டுள்ளனர்.தினகரன் தண்ணீர்த் தொட்டி ஒன்றின் மீது ஏறிக் கொண்டு தப்பியுள்ளார். இருப்பினும் அவர் ஏறிக் கொண்ட தண்ணீர்த் தொட்டியைச்சுற்றிலும் கடல் நீர் அதிக அளவில் நின்றுள்ளது. அது வடிந்த பின்னரே தினகரன் அங்கிருந்து நகர முடிந்துள்ளது.
நீதிபதி தினகரனின் இந்த தீரச் செயல் இப்போதுதான் தெரிய வந்துள்ளது. மீட்புப் பணி சரியாக நடக்கவில்லை, நிவாரணம் சரியாகதரப்படவில்லை என்று குறை கூறிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளது நீதிபதி தினகரனின் மனிதநேயச் செயல்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி













Click it and Unblock the Notifications