பொங்கல்: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோயில், கோயம்புத்தூர், திருவனந்தபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள்இயக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோயிலுக்கு வருகிற 10ம் தேதியும், 12ம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள்எழும்பூரில் இரவு 11 மணிக்குக் கிளம்பி, மறுநாள் மதியம் 1.30 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும். வண்டி எண் 0611 ஆகும்.
இதே ரயில்கள் நாகர்கோயிலில் இருந்து 11 மற்றும் 13 தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்குஎழும்பூர் வந்தடையும். வண்டி எண் 0612 ஆகும்.
தூத்துக்குடிக்கு வருகிற 11 மற்றும் 13ம் தேதிகளில் எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 0613 என்ற வண்டி எண்ணுடன்இந்த ரயில்கள் இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகின்றன.
இதே ரயில்கள் 12 மற்றும் 16ம் தேதிகளில் 0614 என்ற வண்டி எண்ணுடன் தூத்துக்குடியில் இருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டுமறுநாள் காலை 9.30 மணிக்கு எழும்பூர் வந்து சேர்கின்றன.
கோவைக்கு வருகிற 13ம் தேதி இரவு 8.45 மணிக்கு சென்ட்ரல் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் (வண்டி எண்: 0621) புறப்படுகிறது. இதுமறுநாள் காலை 5.20 மணிக்கு கோவையைச் சென்றடைகிறது. இதே ரயில் கோவையில் இருந்து 16ம் தேதி இரவு 11.45 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு சென்ட்ரல் வந்தடைகிறது. இந்த வண்டி எண் 0622.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு வருகிற 8, 10, 12, 13, 14, 15, 16 தேதிகளில் சிறப்பு ரயில்கள் (எண்: 0624)இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் மாலை 4 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 7 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இவை திருவனந்தபுரத்தில் இருந்து 9, 11, 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்குஎழும்பூர் வந்தடையும்.
மேற்கூறிய அனைத்து ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை முதல் நடைபெற்றுவருகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications