சுனாமி தாக்கிய பகுதியில் தீவிபத்து: குடிசைகள் சாம்பல்
சென்னை:
![]() |
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடிசை வீடுகள் கருகிசாம்பலாயின.
சமீபத்தில் வீசிய சுனாமி அலைகளுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகமும் ஒன்று. இந்தப் பகுதியில்ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகிறார்கள். கடலருகே இருந்த இவர்களது வீடுகள் அலைக்கு இறையாயின.
கொஞ்சம் உள் வாங்கிய பகுதியில் இருந்த குடிசைகள் கடல் அலைக்குத் தப்பிவிட்டன. ஆனால், இங்கு இன்று காலை பெரும் தீவிபத்துஏற்பட்டது. வேகமாக பல குடிசைகளுக்கும் தீ பரவியது.
விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் கருகி விட்டன. 1,000க்கும் மேற்பட்ட குடிசைகள் காப்பாற்றப்பட்டன. யாருக்கும் இதில்காயம் ஏற்படவில்லை.
சுனாமி காரணமாக இந்தக் குடிசைகளில் வசித்து வந்த பெரும்பாலானவர்கள் தற்போது இங்கு இல்லை. அவர்கள் துறைமுகம் அருகேமுகாமிட்டுள்ளனர். இதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் ரூ. 50,000 மதிப்புக்கு சேதம் ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை.



Click it and Unblock the Notifications
