சென்னையில் பிரதமர்: ஜெ, கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை:
![]() |
பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை சென்னை வந்தார். ஆளுநர் மாளிகையில் அவரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசுகிறார்.
தமிழகத்தில் சுனாமி அலைகள் தாக்கிய கன்னியாகுமரி, நாகை மாவட்டப் பகுதிகளை மன்மோகன் சிங் ஏற்கனவே பார்வையிட்டார். இந்நிலையில் இன்று அவர் சென்னை வந்தார்.
மும்பையிலிருந்து விமானப்படை விமானம் மூலம் சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் ஆளுனர் பர்னாலா, முதல்வர்ஜெயலலிதா, அமைச்சர்கள், டிஜிபி கோவிந்த், சென்னை மாநகர ஆணையர் நடராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து ஆளுநர் மாளிகைக்குச் சென்ற சிங், அங்கு ஜெயலலிதாவுடனும், பல்வேறு உயர் அதிகாரிகளுடனும் மன்மோகன் சிங்ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் அம் மாநில சுனாமி சேதம் குறித்து விவாதிக்கிறார்.
பின்பு திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்குச் செல்லும் மன்மோகன் சிங், அவரை சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார்.
இன்றிரவு ராஜ்பவனில் தங்கிவிட்டு, நாளை காலை 7 மணிக்கு அந்தமானுக்கு புறப்பட்டுச் செல்கிறார் பிரதமர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications