சுனாமியால் ஆழமான சென்னை துறைமுகம்
சென்னை:
![]() |
நாட்டின் பொருளாதாரத்திற்கும், மனித உயிர்களுக்கும் சுனாமி அலைகள் மிகப் பெரும் சேதத்தை விளைவித்துள்ள நிலையில்சென்னை துறைமுகத்திற்கு மிகப் பெரிய நன்மையை செய்து விட்டுச் சென்றுள்ளது.
சென்னை துறைமுகத்தை ஆழப்படுத்தியதுதான் சுனாமி செய்துள்ள மிகப் பெரிய நன்மை. சுனாமி தாக்குதலுக்குப் பிறகுசென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப கழகத்தின் சார்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது சுனாமியின் அதி வேக அலைகளின் காரணமாக சென்னை துறைமுகம் 2 மீட்டர் அளவுக்குஆழப்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பதிமெட் என்ற முறை மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், சென்னை துறைமுகத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள கடல் மற்றும்துறைமுகத்தின் உட்புறம் உள்ள 2 கப்பல் நிற்கும் தளங்கள் ஆழமடைந்துள்ளன.
டிசம்பர் 26ம் தேதி வீசிய சுனாமி அலைகள் காரணமாக 4 முதல் 5 லட்சம் கியூபிக் மீட்டர் அளவிலான மணல், குப்பைகள்போன்றவை கடலுக்கு அடியிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏற்கனவே 17.4 மீட்டர் ஆழமுடைய சென்னைதுறைமுகத்தின் வெளிப்புற கடல் பகுதி தற்போது 2 மீட்டர் அளவுக்கு கூடுதல் ஆழமடைந்துள்ளது.
இதேபோல, அம்பேத்கர் மற்றும் பாரதி கப்பல் நிற்கும் தளங்களிலும் ஒரு மீட்டர் அளவுக்கு கடல்
ஆழமடைந்துள்ளது. இதன் மூலம் 18.6 மீட்டர் ஆழமுடைய உள்பகுதி தற்போது 19.6 மீட்டர் ஆழமாக மாறியுள்ளது.
சுனாமியின் காரணமாகவே கடல் ஆழப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இது மிகப் பெரிய அற்புதம் என்றும் கடலியல் நிபுணர்கள்கூறுகிறார்கள்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!













Click it and Unblock the Notifications