மன்மோகனுக்கு காஞ்சி மடம் கடிதம்?
சென்னை:
சங்கர மடத்தில் கடந்த 2,500 ஆண்டுகளாக நடந்து வரும் சந்திரமெளலீஸ்வரர் பூஜை உள்ளிட்டவை தங்கு தடையின்றி நடக்கபிரதமர் தலையிட வேண்டும் என்று மன்மோகன் சிங்குக்கு சங்கர மடம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக செய்தி பரவியது.
ஆனால் இதை காஞ்சி மட நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.
சங்கர மடத்தின் மேலாளர் பொள்ளாச்சி மகாதேவ அய்யர், மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பியதாகக் கூறப்பட்டது.அதில், ஜெயேந்திரரைத் தொடர்ந்து விஜயேந்திரரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சந்திரமெளலீஸ்வரருக்கு2500 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த சிறப்பு பூஜை தடைப்பட்டுள்ளது.
விஜயேந்திரர் கைது செய்யப்படுவதால் பூஜைகள் தடைபடாது என்று கூறி முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்எழுதியிருக்கிறார். அது சரியான தகவல்களின் அடிப்படையிலானது அல்ல. விநாயகர், ஆதி சங்கரர் ஆகியோருக்கு மடத்தில்வழக்கமாக பூஜை செய்ய அர்ச்சகர்கள் இருக்கின்றனர்.
அதற்கும், சுவாமிகள் செய்யும் பூஜைக்கும் வித்தியாசம் உள்ளது. சந்திரமெளலீஸ்வரருக்கும், மகா திரிபுரசுந்தரிக்கும் பதவியில்இருக்கும் சங்கராச்சாரியார்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும்.
சங்கராச்சாரியார்கள் வெளியே செல்லும்போது ஸ்படிக லிங்கம், மகா மேருவை தங்களுடன் எடுத்துச் செல்வர். அதற்குஅனுதினம் 3 வேளை பூஜை செய்வர். இந்தப் பூஜை தற்போது தடைபட்டுள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது எனத் தகவல் பரவியது.
இக்கடிதத்தின் ஒரு பிரதி விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
சங்கர மடம் மறுப்பு:
இதை காஞ்சி மடம் நிர்வாகிகள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கோ, பிரதமருக்கோ எந்தக் கடிதம்அல்லது தந்தி அனுப்பவில்லை. இது குறித்து பரவிய செய்திகள் எல்லாமே வதந்திகளாகும் என்று அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications