மடம்: ஜெயலலிதாவிடம் உறுதி கேட்கும் பாஜக
சென்னை:
சங்கர மடத்தை தமிழக அரசு கையகப்படுத்தாது என்பதை முதல்வர் ஜெயலலிதா உறுதிப்பட தெரிவிக்க வேண்டும் என தமிழகபாஜக தலைவர் ாதாகிருஷ்ணன் கோரியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சங்கராச்சாரியார்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று எந்தபாஜக தலைவரும், ஒருபோதும் கூறவில்லை.
காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு எதிராக போலீஸார் செயல்படுத்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஒருவர் பின்ஒருவராக கைது செய்து கடைசியாக ஜெயேந்திரர் ஜாமீனில் வெளிவரும் நாளில் விஜயேந்திரரைக் கைது செய்தனர்.
இதில் தமிழக அரசுக்கு உள்நோக்கம் இருப்பதாகவே பாஜக கருதுகிறது. சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதில்பாஜகவுக்கு உள்ள அளவுக்கு வேறு யாருக்கும் அக்கறை இருக்க முடியாது. எந்தக் கட்சியும் காட்டியாரத வகையில் பாஜக இதில்கூடுதல் அக்கறை காட்டி வருகிறது.
தனது அரசு எடுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக முதல்வர் ஜெயலலிதா பாஜக மீது கடும் கண்டனஏவுகணைகளை ஏவி விட்டுள்ளார்.
சங்கரராமன் எழுதிய கடிதங்களைத் தவிர வேறு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று கேட்டு சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்குகண்டனம் தெவித்துள்ளது. ஆதாரங்களை பொது மக்களிடம் காட்ட முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். சுப்ரீம்கோர்ட்டிலாவது அதை தாக்கல் செய்திருக்கலாமே?
திமுகவின் அரசியல் நெருக்கடி அல்லது இந்து மடங்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மத்தியஅரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு துணை போய் விட்டதாகவே தெரிகிறது.
கர்நாடகத்தில் பெஜாவர் மடத்தை அம் மாநில அரசு கையகப்படுத்தியது. தமிழகத்தில் கும்பகோணத்தில் ஒரு மடம் அரசு வசம்வந்தது. இவை எல்லாம் இந்து சமய நிறுவனங்களின் மீதான அரசின் தலையீடு. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
காஞ்சி மடத்தை அரசு ஏற்காது என்று முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கூறியதை இப்போது மீண்டும் உறுதிபட கூறாததுஏன்? காஞ்சி மடத்தை அரசு ஏற்கவே ஏற்காது என்று தமிழக அரசு உறுதிபடக் கூற வேண்டும் என்றார்.
முன்னதாக பாஜக சிறுபான்மைப் பிரிவு சார்பில் கட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா நடந்தது. அதில் அகில இந்திய செயலாளர்இல.கணேசன், ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் நாசே ராமச்சந்திரன், மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவர் முனவர் பேகம்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இல.கணேசன் அறிக்கை:
இந் நிலையில் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சி மடத்தை வைத்து மறு வாழ்வு பெற பாஜக முயல்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மறுவாழ்வு பெற வேண்டியநிலையில் பா.ஜ.க. இல்லை. தமிழகத்தில் (அதிமுகவுடன் கூட்டணி வைத்து) ஒரு இடம் கூட பிடிக்க முடியாமல் போனதால் தான்மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது.
காஞ்சி மடம் ஆதரவற்று, நாதியற்றுப் போகவில்லை என்பதைக் காட்ட பாஜக ஆதரித்துப் பேசினால் அதற்கு அரசியல் சாயம்பூசுவதா?
மதமாற்றத் தடைச் சட்டத்தை தேர்தல் தோல்வியால் வாபஸ் பெற்ற தமிழக அரசைப் போல பாஜக அரசியல் லாபம் தேடமுயலவில்லை என்று கூறியுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications