5 பேரை ரயிலிலிருந்து தள்ளி கொன்ற ராணுவத்தினர் கைது
லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் 5 பேரை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிக் கொன்ற ராணுவ வீரர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
டெல்லி- கான்பூர் இடையே செல்லும் பராக்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் ராணுவ வீரர்கள் இருந்த பெட்டியில் சில பயணிகள் ஏறினர்.அவர்களை இறங்குமாறு ராணுவத்தினர் கூறியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பயணிகளில் 6 பேரை ராணுவத்தினர் ரயிலிலிருந்துதள்ளி விட்டனர்.
அப்போது மற்றொரு தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த சம்பூர்ணா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியதில் 5 பேர் இறந்தனர்.இதில் ஒரு பெண்ணும் அடக்கம். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் உத்திரப்பிரதேசம் மாநிலம் சிக்கோகாபாத் ரயில்நிலையம் அருகே நடந்தது.
பயணிகளைத் தள்ளிவிட்ட 3 ராணுவத்தினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். ராணுத்தினர்ராஜ்புதனா ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள்ஆவர்.
காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த ராணுவ அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications