பூகம்ப வதந்தியால் சென்னை பள்ளிகளில் பீதி!
சென்னை:
சென்னையில் பூகம்பம் ஏற்பட்டதாகவும், சில பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுந்துவிட்டதாகவும் பரப்பப்பட்ட வதந்தியால்பெற்றோர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
சுனாமி அலைத் தாக்குதலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆங்காங்கே வதந்திகள் கணக்கில்லாமல் பரப்பப்பட்டு வருகின்றன. இந் நிலையில்நேற்று சென்னை நகரின் பல பள்ளிகளில் பிற்பகலுக்கு மேல் பூகம்ப வதந்தி பரவியது.
நகரில் நல நிடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பல கட்டடங்கள் இடிந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. குறிப்பாக ராயபுரம் பகுதியில் உள்ளஇரண்டு பள்ளிகளும், சாந்தோமில் உள்ள பள்ளியும் நில நடுக்கத்தால் இடிந்து விழுந்துவிட்டதாக புரளி கிளம்பியது.
இதையடுத்து இப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அலறியபடி ஓடி வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது.
பூகம்பம் ஏதும் ஏற்படவில்லை, பிள்ளைகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும்எவ்வளவோ எடுத்துக் கூறியும் பெற்றோர்கள் கேட்காததால், இரு பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்குத்திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதேபோல தண்டையார்ப்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் பூகம்ப பீதி காரணமாக பல பள்ளிகள் விடுமுறைவிடப்பட்டன.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications