ஹெலிகாப்டர் விபத்து: நக்ஸல்களிடம் தப்பிய நாயுடு
டெல்லி:
ஹெலிகாப்டர் விபத்தில் முன்னாள் பாஜக தலைவர் வெங்கையா நாயுடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக வெங்கையா நாயுடு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ஹெலிகாப்டரில் இன்று புறப்பட்டார். அப்போதுஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதனால் பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டம் புந்தேரி பகுதியில் பிற்பகல் 3 மணியளவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக வெங்கையா நாயுடு உட்பட அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர்.
அந்த நேரத்தில் கயா மாவட்டத்தில் இருந்த பாஜக பொதுச் செயலாளர் அருண் ஜேட்லிக்கு உடனடியாக இந்த விபத்து குறித்து வெங்கையாநாயுடு தகவல் அனுப்பினார். அந்தப் பகுதி நக்ஸலைட்கள் அதிகம் இருக்கும் பகுதியாதலால், வெங்கையா நாயுடுவுக்கு உடனடியாகபாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு அருண் ஜேட்லி கோரிக்கை விடுத்தார்.
ஆனால் ஏறக்குறைய ஒரு மணிநேரம் கழித்துதான் போலீஸார் அந்தப் பகுதிக்கு வந்தனர். அதற்குள் பாஜக தொண்டர் ஒருவரின் இருசக்கரவாகனத்தில் வெங்கையா நாயுடு அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டார்.
வெங்கையா நாயுடு சென்றதும் ஹெலிகாப்டர் மீது நக்ஸலைட்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications