ஜெ. பாவம் செய்தவர்: கர்நாடக மடாதிபதி

Subscribe to Oneindia Tamil

கலவை:

ஜெயேந்திரரைக் கைது செய்த முதல்வர் ஜெயலலிதாவை வரும் சட்டசபைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று கர்நாடக மாநிலம் வீரசைவ அம்பி மடத்தின் தலைவர் வீரபத்திர சுவாமிகள் கூறினார்.

கலவையில் ஜெயேந்திரரை சந்தித்த அவர் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

காஞ்சி சங்கர மடம் புனிதமான இடம் அல்ல என்றும், அது கோயில் இல்லை என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. இது லட்சக்கணக்கானஇந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டது. இவ்வாறு கூறியதை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

சங்கர மடத்தில் ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகளின் சமாதி உள்ளது. இது கோயிலுக்கு சமமானது. குருவாயூர் கோயிலுக்கு யானைகொடுத்தவர் ஜெயலலிதா. அவருக்கு இது கூடவா தெரியாது?

சங்கராச்சாரியார்கள் விவகாரத்தில் தமிழக அரசும், போலீஸாரும் வன்மத்துடன் நடந்து கொள்கின்றனர். ஜெயேந்திரர், விஜயேந்திரர்இருவரையும் கைது செய்ததன் மூலம் ஜெயலலிதா தனது புனிதத் தன்மையை இழந்து விட்டார், பாவம் செய்து விட்டார்.

இந்த பாவத்திற்கு விமோசனம் பெற, ஜெயேந்திரர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் ஜெயலலிதா உடனடியாக வாபஸ் பெறவேண்டும். ஜெயேந்திரரை நிரபராதி என்று அறிவிக்க வேண்டும். அதோடு ஜெயேந்திரர் விவகாரத்தில் தவறாக நடந்து கொண்டபோலீஸாரையெல்லாம் டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இல்லாவிட்டால் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் தமிழக மக்களின் கோபம் தெரியும். அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை தோற்கடித்துவீட்டுக்கு அனுப்ப வேண்டும். இது நிச்சயம் நடக்கும் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+