அருணா கொலை: ராஜாவுக்கு முழு தொடர்பு
ஆலங்குளம்:
ஆலடி அருணா கொலை வழக்கில் கைதான ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள்சிக்கியுள்ளதாக நெல்லை சரக டிஐஜி கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அருணா கொலை வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட எஸ்.ஏ. ராஜா, ஆலங்குளம் காவல் நிலையத்தில் வைத்து நேற்றுநள்ளிரவு வரை விசாரிக்கப்பட்டார். ராஜாவிடம் டிஐஜி கோபால கிருஷ்ணன், எஸ்.பி. ஆனந்த்குமார் சோமானி ஆகியோர் தீவிரவிசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் எஸ்.பி. பிரேம்குமார் ஸ்டைலில், இந்தக் கொலை வழக்கில் கைதான கூலிப் படை ஆசாமிவேல்துரையையும், எஸ்.ஏ.ராஜாவையும் எதிரெதிராக உட்கார வைத்து மாறி மாறி கேள்விகள் கேட்டு போலீஸார் விசாரணை நடத்தினர்.
பின்னர் எஸ்.ஏ. ராஜா தூங்க கட்டில், தலையணை கொண்டு வரப்பட்டது. ஆலங்குளம் காவல் நிலையத்திலேயே அவர் தூங்கினார்.
இன்று காலை 6 மணிக்கு அவர் தென்காசி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். காலை 10.10 மணிக்கு தென்காசி நீதிமன்ற நீதிபதிஅனில்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை வருகிற 9ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதிஉத்தரவிட்டார். இதனையடுத்து எஸ்.ஏ. ராஜா பாளையங்கோட்டை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அதேபோல் வேல்துரையும் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக விசாரணைக்கு இடையே கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தக் கொலை வழக்கில் எஸ்.ஏ. ராஜாவுக்கு முக்கியத் தொடர்பு உள்ளது தெரியவருகிறது. அதற்கான வலுவான ஆதாரங்களும்சிக்கிவிட்டன.
இவரது கைதின் மூலம் ஆலடி அருணா கொலை வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. வழக்கு தொடர்பான முழு விவரங்களும்இன்று (திங்கள்கிழமை) நிருபர்களிடம் தெரிவிக்கப்படும் என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications