இளம்பெண் மானபங்கம்: முடி மறைத்த காக்கிகள்
கன்னியாகுமரி:
கேரள இளம் பெண் ஒருவர் கன்னியாகுமரிக்குக் கொண்டு வரப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரை மானபங்கம் செய்தகும்பலிடம் பணம் வாங்கிக் கொண்ட காக்கிச் சட்டைகள் இந்த முழு விவரத்தையும் மூடி மறைத்துவிட்டதாகத் தெரிகிறது.
கேரள மாநிலம் கொச்சினைச் சேர்ந்தவர் ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறிய ஒரு விபச்சாரபெண் புரோக்கர், இவரை 4 ஆண்களுடன் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தன்னை 4 ஆண்களின் காமம் தீர்க்க அனுப்பி வைத்துள்ளதை உணராத ரேவதி கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். அங்கு ஒரு விடுதியில்அறை எடுத்த வாலிபர்கள் ரேவதியை மாற்றி மாற்றி பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்ப முயன்று முடியாத ரேவதி அலறியுள்ளார். அறைக்குள் ஏதோ நடப்பதை உணர்ந்த விடுதியின் மேலாளர்போலீசாருக்குத் தகவல் தந்தார்.
போலீசார் வருவதை அறிந்த 4 பேரும் தப்பியோடியுள்ளனர். இதையடுத்து ரேவதியிடம் போலீசார் விசாரித்தபோது, உண்மை தெரிந்தது.
போலீசார் உடனடியாக களத்தில் இறங்கி கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் வைத்து அந்த 4 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர்.பின்னர் கொச்சி பெண் புரோக்கரையும் பிடித்து கன்னியாகுமரி கொண்டு வந்தனர்.
இதுவரை சரியாகவே நடந்து கொண்ட போலீசார் இதற்கடுத்து செய்த செயல் தான் கேவலமான வேலை.
பெண் புரோக்கரிடம் ரூ. 10,000த்தை பறித்துக் கொண்ட போலீசார் இந்த விவகாரம் குறித்தே கேஸே பைல் செய்யாமல் ரேவதியையும்அந்தப் பெண்ணுடனேயே திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் 4 காமுகர்களிடமும் பெரிய அளவில் பணம் பறித்துக் கொண்டு அவர்கள் மீது லொச்சை கேஸ் ஒன்றை பதிவு செய்து ஜாமீனில்வெளியில் விட்டுவிட்டனர். இதையடுத்து இந்த நான்கு மாடுகளும் தப்பி கேரளாவுக்கு ஓடிவிட்டன.
இந்த விவகாரம் முழுவதுமாக பூசி மூடப்பட்டுவிட்ட நிலையில், கொச்சிக்குச் சென்ற ரேவதி தன்னை அந்தப் பெண் புரோக்கரிடம் இருந்துவிடுவித்துக் கொண்டு அங்குள்ள மாதர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து தென் மண்டல காவல்துறை அதிகாரிகளுக்கு அந்தச் சங்கத்தினர் புகார் அனுப்பி வைத்துள்ளதாகத்தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications