குண்டர் சட்ட கைது: கலெக்டரிடம் ரகு, அய்யர் மனு
காஞ்சிபுரம்:
குண்டர் சட்டத்தில் தான் கைது செய்ததை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விஜயேந்திரரின் தம்பி ரகு, காஞ்சி மடத்தின்முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர் ஆகியோர் மனு அனுப்பியுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ரகு, சுந்தரேச அய்யர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு கடந்த மாதம் 22ம் தேதி குண்டர்சட்டமும் அவர்கள் மீது பாய்ந்தது. இதனால் இவர்கள் இருவரும் ஜாமீனில் வெளி வர முடியாது.
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான மறு ஆய்வுக் குழு இவர்கள் மீதான வழக்குகளை ஆராய்ந்து, குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்தது சரியல்ல என்று கூறினால் தான் இவர்களால் வெளிவர முடியும்.
குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் கைதிற்கு எதிரான தங்களது ஆட்சேபணையை 12 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும். அந்த வகையில் ரகுவும் அய்யரும் மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேசனிடம் தங்களது ஆட்சேபணை மனுவை அளித்தனர்.
ரகுவின் மனுவை அவரது வழக்கறிஞர் ரேவதி வாசுதேவன், வெங்கடேசனிடம் அளித்தார். சுந்தரேச அய்யர் தனது மனுவைத் தபாலில்அளித்தார்.
இதற்கிடையே ரஜினி, மாட்டு பாஸ்கர், அனில் ஆகியோர் தங்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியல் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
மொத்தம் 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications