கோவா: ஜனநாயகத்தை கொன்ற பாஜக, காங்
பனாஜி:
கோவா சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்த பின்னும் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு ஆளுநர் ஜமீரால்கலைக்கப்பட்டது.
ஆனால், தனது மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக ஒரு எதிர்க் கட்சி எம்எல்ஏவை அவையில் இருந்து வெளியேற்றச் செய்தார் பாரிக்கர்.
கோவா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 3 அமைச்சர்கள் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை திடீரென விலக்கிக் கொண்டதையடுத்துஅங்கு அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பா.ஜ.கவும் காங்கிரசும் தங்களுக்கு தலா 18 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறின.
இதையடுத்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பா.ஜ.க. முதல்வர் பாரிக்கருக்கு ஆளுனர் ஜமீர் உத்தரவிட்டார். (இவர்காங்கிரஸ்காரர் ஆவார்).
அதன்படி மனோகர் பாரிக்கர் நேற்று சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸை ஆதரிக்கும் சுயேட்சைஎம்.எல்.ஏ. ரோட்ரிக்ஸை தகுதி நீக்கம் செய்த சபாநாயர் அவரை சட்டசபையை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார்.
இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனாலும் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார்.
அதில் பாரிக்கர் அரசுக்கு 17 பாஜக எம்.எல்.ஏக்களும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏவின் ஆதரவும் சேர்த்து மொத்தம் 18 பேர் ஆதரவுதெரிவித்திருப்பதாகவும், 17 பேர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும் கூறிய சபாநாயகர், இதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக அரசுவெற்றி பெற்றதாகவும் அறிவித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்று, பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரி போராட்டம்நடத்தினர்.
அரசின் மீது வாக்கெடுப்பு நடக்கும்போது எதிர்க் கட்சியை ஆதரிக்கும் எம்எல்ஏவை சபாநாயகரின் உதவியோடு முதல்வர் பாரிக்கர்அவையை விட்டு வெளியேற்றிவிட்டதாகவும், இதனால் அவையில் நடந்த வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றது செல்லாது என்றும்காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறினர்.
இந் நிலையில் பாஜக அரசை ஆளுனர் ஜமீர் திடீரென டிஸ்மிஸ் செய்தார். அடுத்து ஆட்சி அமைக்க வருமாறு சட்டசபை காங்கிரஸ் தலைவர்பிரதாப் சிங் ரானேக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து பிரதாப் சிங் ரானே நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில்பதவியேற்றுக் கொண்டார்.
அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட சுயேட்சை எம்.எல்.ஏவான ரோட்ரிக்ஸ் துணை முதல்வராகப் பதவியேற்றார். மற்ற அமைச்சர்கள்இன்று மாலை பதவியேற்கிறார்கள். ரானே ஒரு வாரத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுனர்உத்தரவிட்டுள்ளார்.
பாஜக எதிர்ப்பு:
இந் நிலையில் கோவாவில் பாஜக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதை ஜனநாயகப் படுகொலை என்று கூறியிருக்கும் பாஜக, இதை எதிர்த்துநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளது.
இந் நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் பாஜக தலைவர் அத்வானி, மனோகர் பாரிக்கர் உட்பட மூத்த பாஜக தலைவர்கள்இன்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அவரது இல்லத்தில் சந்திக்க இருக்கிறார்கள்.
அப்போது, கோவா விவகாரத்தில் கலாம் தலையிட்டு மீண்டும் மனோகர் தலைமையில் பாஜக அரசை ஏற்படுத்த வேண்டும் என்றுகோரிக்கை வைக்கிறார்கள். இது குறித்து நிருபர்களிடம் தெரிவித்த மக்களவை பாஜக துணைத் தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா,
ஆளுநர் முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே அவரை திரும்பப் பெற வேண்டும் என்றுகலாமிடம் கோருவோம் என்றார்.
கலாமைச் சந்தித்த பின்பு, பாஜக மூத்த தலைவர்கள் கூடி, இந்த விஷயத்தை சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனைநடத்தவிருக்கிறார்கள்.
பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம்:
ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தும்போது எதிர்க் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவை வெளியேற்றிவிட்டு,ஓட்டெடுப்பு நடத்தியதன் மூலம் பாஜக தான் ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது என காங்கிரஸ் கூறியுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications