சுனாமி: ஜெ. புகாருக்கு ராணுவம் மறுப்பு
ஊட்டி:
சுனாமி பாதித்த பகுதிகளில் பிணங்களை அகற்ற ராணுவ வீரர்கள் மறுத்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறிய புகாருக்கு ராணுவம் மறுப்புதெரிவித்துள்ளது.
சுனாமி பாதித்த நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ராணுவம் மீட்புப் பணயில் ஈடுபடுத்தப்பட்டது. மீட்புப் பணியின்போதுஇறந்தவர்களின் உடல்களை அகற்ற ராணுவ வீரர்கள் மறுத்ததாக சட்டசபையில் ஜெயலலிதா சமீபத்தில் புகார் தெரிவித்தார்.
இந்தப் புகாரை ராணுவம் தற்போது மறுத்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் மெட்ராஸ் ரெஜிமென்ட் மைய கமாண்டன்ட் பிரிகேடியர்ஏ.கே. அரோரா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சுனாமி பாதித்த பகுதிகளில் ராணுவ வீரர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
பாலங்கள் சீரமைப்புப் பணி, கட்டிக் கொடுக்கும் பணி, உப்புத் தண்ணீரை குடிநீராக மாற்றித் தருவது என தன்னலமற்ற பணிகளில் ராணுவவீரர்கள் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது இப்படிப்பட்ட புகாரைக் கூறியுள்ளது மன வருத்தம் தருகிறது, மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில்ராணுவ வீரர்கள்தான் சிதிலமடைந்த வீடுகள், இறந்த உடல்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். அவர்கள் மீது இவ்வாறு கூறுவதுநியாயமல்ல என்றார் அரோரா.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications