காங். அரசை எதிர்த்து காங். எம்எல்ஏ உண்ணாவிரதம்
பாண்டிச்சேரி:
புதுவையில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ சட்டசபை முன்உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாக காங்கிரஸ்கட்சி தெரிவித்தது. ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் நிவாரண உதவிகள் தங்களுக்குக்கிடைக்கவில்லை என்று கூறி ஆங்காங்கே போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.
இந் நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றுகூறி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், அரசு கொறடாவுமான ராஜவேலு புதுவை சட்டசபை முன் உண்ணாவிரதம்இருந்தார்.
இதுகுறித்து ராஜவேலு கூறுகையில், புதுவையின் பல பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு இன்னும் முழுமையானஅளவுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இவ்வாறு நடப்பதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை அரசுக்கு எடுத்துக் காட்டத்தான் உண்ணாவிரதம்இருந்தேன் என்றார்.
ராஜவேலுவுடன் திரளான மீனவர்களும் பங்கேற்றனர். காங்கிரஸ் அரசை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.வேஉண்ணாவிரதம் இருந்ததால் புதுவையில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications