ஜட்டியுடன் விடப்பட்ட வாலிபர்: "பிஸ்கட்" கொள்ளையர்கள் அட்டகாசம்
சென்னை:
மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளையடிக்கும் கொள்ளையர்களின் அட்டகாசத்தால் ஒரு வாலிபர் ஜட்டியுடன் பரிதவித்த நிலைஏற்பட்டது.
சென்னை வரும் ரயில்களில் மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளையடிப்பது சகஜமான ஒன்று. மயக்க பிஸ்கெட் கொள்ளையர்களிடம் சிக்கிபலரும் பணம், பொருட்களை இழந்துள்ளனர்.
இந் நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு வாலிபர், போட்டிருந்த ஜட்டியைத் தவிர அனைத்தையும் மயக்க பிஸ்கெட் கொள்ளையர்களிடம்இழந்துள்ளார்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பயணிகள் அனைவரும் சென்ற பின்னர் துப்புரவுத்தொழிலாளர்கள் ரயிலை சுத்தம் செய்யத் தொடங்கினர்.
அப்போது, ஒரு வாலிபர் ஜட்டியுடன் மயங்கிக் கிடந்ததை கண்ட ஊழியர்கள் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.கண் விழித்தபின்பு அவரிடம் போலீஸார் விசாரித்தபோது தெரிய வந்த தகவல்:
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அந்த வாலிபர். ஸ்ரீகாகுளத்தில் சோதனைக் கூடம்(லேப்) வைத்துள்ளார். சில பொருட்களை வாங்குவதற்காக சென்னை கிளம்பினார். ரிசர்வேஷன் செய்யாததால் பொதுப் பெட்டியில்ஏறியுள்ளார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.
அந்த சமயத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் ஆந்திர நபருக்கு உட்கார இடம் கொடுத்துள்ளனர். சாப்பிட பிஸ்கெட்டும்கொடுத்துள்ளனர். அவ்வளவுதான், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியாது.
அவரது பேண்ட்டில் வைத்திருந்த ரூ. 25,000 ரொக்கம், சட்டையில் இருந்த ரூ. 260 ஆகியவற்றை எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள்,பேண்ட், சட்டை ஆகியவற்றையும் கழற்றிக் கொண்டு மாயமாகியுள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications