சிறுமியிடம் சில்மிஷம்: டாக்டருக்கு தர்ம அடி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற டாக்டரை பொதுமக்கள் அடித்து, உதைத்து காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில் பெதஸ்டா என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் தாமஸ் டென்னிஸ் (49). இவருக்குடேவிஸ்புரத்தில் ஒரு நண்பர் உள்ளார். இந்த நண்பரின் அண்ணன் மகளான 10 வயது சிறுமி, அடிக்கடி தாமஸின் மருத்துவமனைக்கு வந்துசெல்வார்.

இந் நிலையில் டியூஷன் சென்றுவந்த அந்த சிறுமியை தாமஸ் மருத்துவமனைக்கு அழைத்தார். கலர் மீன்கள் அடங்கிய தொட்டியைக்காட்டுவதாகக் கூறி உள்ளே அழைத்துச் சென்ற தாமஸ் , சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார். அதிலிருந்து தப்பி வந்த சிறுமி அதையாரிடமும் கூறவில்லை.

அதன்பிறகு சிறுமி சரியாக சாப்பிடவில்லை, பேசவில்லை. எந்நேரமும் பதற்றத்துடன் காணப்பட்டாள். இந்த சம்பவம் குறித்து தன்னுடன்படிக்கும் மற்றொரு சிறுமியிடம் தெரிவித்துள்ளாள். பின்னர் தைரியம் வரப் பெற்று, டாக்டர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதைபெற்றோரிடம் சிறுமி தெரிவித்தாள்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பொது மக்கள் மருத்துவமனைக்குச் சென்று டாக்டர் தாமஸை அடித்து, உதைத்து போலீஸில்ஒப்படைத்தனர். போலீஸார் தாமஸைக் கைது செய்து தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி கபீர் முன்பு ஆஜர்படுத்தினார். பின்னர் நீதிபதியின்உத்தரவுப்படி அவர் சிறையிலடைக்கப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பே இதேபோன்ற வழக்கில் தலைமையாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+