அமெரிக்க மாப்பிள்ளை மாயம்: வரதட்சணை வாங்கி கொண்டு கம்பி நீட்டினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அமெரிக்க மாப்பிள்ளை மாயமானதால் இன்று நடந்திருக்க வேண்டிய திருமணம் நின்று போய்விட்டது.

ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (27). அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராகப் பணியாற்றும்இவருக்கும் சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்தவர் ஷோபாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

முதலில் இன்டர்நெட் மேட்ரிமோனியல் தளம் மூலமாக இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகியுள்ளனர். பின்னர் இரு வீட்டினரும்சம்பந்தம் பேசியுள்ளனர்.

அப்போது மாப்பிள்ளைக்கு ரூ. 10 லட்சம் ரொக்கம், மணப்பெண்ணுக்கு 100 பவுன் நகை, மாப்பிள்ளைக்கு 25 பவுன் தனியாக நகை,மற்றும் ரூ. 1 லட்சத்துக்கு சீர் செய்ய வேண்டும் என கிஷோர்குமாரின் பெற்றோர் கேட்டுள்ளனர்.

இதைத் தர ஷோபாவின் பெற்றோர் ஒப்புக் கொண்டதையடுத்து கடந்த நவம்பர் 21ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது வருவதாகஇருந்த கிஷோர் அமெரிக்காவில் இருந்து வரவில்லை.

நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் வரதட்சணையில் முதல் பார்ட்டாக ரூ. 5 லட்சம், 15 பவுன் நகை, ரூ. 25 துணிமணி ஆகியவற்றை கிஷோரின்பெற்றோரிடம் தந்தனர் ஷோபாவின் குடும்பத்தினர்.

பிப்ரவரி 13ம் தேதி (இன்று) திருமணத்தை வைத்துக் கொள்வது என்று முடிவானது. இதற்காக புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலையில் உள்ளபிடிஆர் திருமண மண்டபம் புக் ய்ெயப்பட்டது.

கிஷோர் குமார் பிப்ரவரி 6ம் தேதி இந்தியா வந்தார். பெற்றோருடன் சென்னைக்கு வந்து ஷோபாவைப் பார்த்தார். பின்னர் அவருக்குதி.நகரில் ரூ. 25,000க்கு துணிகள் எடுத்துத் தந்தனர் ஷோபாவின் பெற்றோர்.

இதன் பின் ஆந்திராவுக்குப் போன கிஷோர் மற்றும் அவரது பெற்றோரிடம் இருந்து ஒரு தகவலும் வரவில்லை. திருமண ஏற்பாடுகளில்பிஸியாக இருப்பார்கள் என நினைத்து விட்டுவிட்ட ஷோபாவின் பெற்றோர், 11ம் தேதி பொறுமை இழந்து ஆந்திராவில் கிஷோரின்வீட்டை தொடர்பு கொண்டனர்.

அப்போது தங்களது மகனை கடந்த 8ம் தேதி முதல் காணவில்லை என்றும், எங்கு சென்றான் என்று தெரியவில்லை என்றும் கிஷோரின்பெற்றோர் கூறினர்.

இதையடுத்து ஷோபாவின் பெற்றோரும் உறவினர்களும் ஆந்திராவுக்குச் சென்றனர். அங்கு கிஷோர் இல்லாததால் சென்னைக்குத்திரும்பிய ஷோபாவின் பெற்றோர் போலீசில் புகார் தந்துள்ளனர்.

இது குறித்து பெரவள்ளூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப் பதிவு செய்து, தனிப்படை போலீசாரைஆந்திராவுக்கு அனுப்பியுள்ளார். கிஷோரின் பெற்றோரிடம் விசாரணை நடக்கவுள்ளது.

கிஷோர் மீது வரதட்சணை கேட்டது, ஏமாற்றியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாப்பிள்ளை மாயமானதால் இன்று நடந்திருக்க வேண்டிய திருமணம் நின்று போய்விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+