ஹைதராபாத் ஓபன்: சானியா சாம்பியன்!
ஹைதராபாத்:
ஹைதரபாத் ஓபன் டென்னிஸில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா, உக்ரைனின் அல் யோனாவை தோற்கடித்தார். இதன்மூலம் டபிள்யூ. டி.ஏ. டென்னிஸில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா படைத்தார்.
காலில் காயத்துடன் இந்தப் போட்டித் தொடரில் களமிறங்கிய சானியா, வரிசையாக வெற்றிகளைக் குவித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். இறுதிப் போட்டியில் அல் யோனாவை எதிர்த்து விளையாடினார்.
இதில் 6-4, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் அல் யோனாவை வீழ்த்திய சானியா, ஹைதராபாத் ஓபன் டென்னிஸ் சாம்பியன் ஆனார்.
இதன் மூலம் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும்படைத்தார். சானியாவுக்கு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சாம்பியன் பட்டம் வழங்கினார். சானியாவுக்கு ரூ.10 லட்சம் பரிசுகிடைத்தது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட தலைவர்கள் பலரும் வாழ்த்துதெரிவித்தனர்.
கலாம் தனது வாழ்த்துச்செய்தியில்,
இந்தியர் ஒருவர் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சானியா வருங்காலத்தில் சிறந்த வீராங்கனையாகத்திகழ்வார் என்று நான் நம்புகின்றேன். இவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் சீன வீராங்கனைகளான ஜி யான், ஜீ ஜாங் ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்டுகளில்தனது சக நாட்டவர்களான டிங் லீ, டியான் சன் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications