பி.இ: சுயநிதி கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு எப்போது?
சென்னை:
தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூகளில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என நீதிபதி சுப்ரமணிகமிஷன் அறிவித்துள்ளது.
தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர் இடங்களை நிரப்ப நுழைவுத் தேர்வு நடத்தஅண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
இது குறித்த கொள்கைத் திட்டம் வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சுப்பிரமணியை தலைவராகக் கொண்ட கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது.
இக் குழுவின் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமி, தமிழ்நாடு உயர் கல்விசெயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பழனிச்சாமி, தமிழ் இணையப் பல்கலைக்கழகஇயக்குனர் சங்கரநாராயணன், தொழில்கல்வித்துறை ஆணையர் மீனாட்சி ராஜகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் நீதிபதி சுப்பிரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும் காலியிடங்களை நிரப்ப நுழைவுத் தேர்வு நடத்த 3அமைப்புகள் அனுமதி கோரியுள்ளன.
இதில் தமிழ்நாடு சுய நிதிப் பொறியியல், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு தங்களிடம் உறுப்பினர்களாகஉள்ள 150 கல்லூரிகளின் பட்டியலை எங்களிடம் வழங்கியுள்ளது.
மற்ற இரண்டு அமைப்புகளான தமிழ்நாடு கிறிஸ்துவ சிறுபான்மை பொறியியல் கல்லூரிகள் சங்கம், அகில இந்திய மருத்துவம்,பொறியியல் கல்லூரிகளின் சங்கம் ஆகியவை இன்னும் தங்களது உறுப்பினர் கல்லூரிகள் குறித்த பட்டியலை அளிக்கவில்லை.
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மொத்த இடங்கள் எத்தனை, மாணவர் சேர்க்கையை எப்படிநடத்துவது என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்துவருகிறது.
அந்த பெஞ்ச் தனது தீர்ப்பை அளித்த பின்னரே நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
மார்ச் 15ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி வந்தால் மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து நடவடிக்கைகளும்முடிக்கப்படும் என்றார் சுப்பிரமணி.
தமிழகத்தில் மொத்தம் 225 சுய நிதிப் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 70,000 இடங்கள் உள்ளன. இதில் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் வரும் மாணவர் இடங்களுக்கு அதிக அளவில் மாணவர்கள் சேராததால் கடந்த ஆண்டு 18,000 சீட்கள் நிரப்பப்படாமலேயே இருந்தனஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications