தாமுவின் " சுனாமி மிமிக்ரி: 2 குழந்தைகள் மயக்கம்!
நாகப்பட்டனம்:
சுனாமி பாதித்த நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் மிமிக்ரி நிகழ்ச்சி நடத்திய நடிகர் தாமு, சுனாமி அலையைப் போல குரல்எழுப்பியதால், 2 குழந்தைகள் பயந்து போய் மயங்கி விழுந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அக்கரைப்பேட்டை பகுதியில் நடிகர் தாமு, சுனாமியால் பாதித்தவர்களை மகிழ்விப்பதற்காக இலவசமாக மிமிக்ரி நிகழ்ச்சியை நடத்தினார்.
இதை அப்பகுதியைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், குழந்தைகள் இதனைப் பார்க்க வந்தனர்.
நிகழ்ச்சியின்போது இப்போது சுனாமி அலைகளைப் போல மிமிக்ரி செய்யப் போகிறேன் பாருங்கள் என்று கூறிய தாமு, சுனாமி அலையின்சப்தம் போல குரல் எழுப்பினார்.
மைக்-ஸ்பீக்கர் மூலம் அதிர்ச்சிகரமாக வெளிப்பட்ட சத்தம் கேட்டு, சுனாமி அலையின் கொடூரத்தை ஏற்கனவே நேரில் அனுபவித்துதற்போதுதான் மீண்டுள்ள பல குழந்தைகள் பயத்தில் அலறின.
இதில் 2 குழந்தைகள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தண்ணீர் தெளித்துகுழந்தைகளை மயக்கம் தெளிய வைத்தனர். அப்படியும் அந்தக் குழந்தைகளின் முகத்தில் பீதி நீங்கவில்லை.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் இரு குழந்தைகளையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுசெய்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு சுனாமி போல குரல் எழுப்பாமல் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையிலான மிமிக்ரியைத் தொடர்ந்தார் தாமு.
பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் சுனாமி பயம் எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்து போய்விட்டது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம். அப்பகுதி குழந்தைகள், பெரியவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சைகள் தேவைப்படுவதாக பல சமூக அமைப்புகள் கோரி வருவதுகுறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications