For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவேக் ஓபராய் மீது காமெடி விவேக் பாய்ச்சல்

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள கடலூரில் கட்டப்படவுள்ள புதிய அனாதை இல்லத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கிறது.

Vivek Oberai in Cuddalore
இந் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பர்னாலா, உத்தராஞ்சல் மாநில ஆளுநர் சுதர்சன் அகர்வால், பாண்டிச்சேரி மாநில துணை நிலை ஆளுநர்லகேரா மற்றும் நடிகர் விவேக் ஓபராய், அவரது ஆன்மிக குரு ரிஷிகேஷ் சித்தானந்த சுவாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள மகளிர் சேவை இல்லத்தின் வளாகத்தில் இந்த அனாதைகள் இல்லம் கட்டப்படவுள்ளது. சுனாமியால்உறவுகளை இழந்து ஆதரவில்லாமல் தவிப்பவர்கள் இங்கு தங்க வைக்கப்படுவர்.

விவேக் ஓபராய் உள்ளிட்டோரின் முயற்சியால் இந்த இல்லம் கட்டப்படுகிறது.

விவேக் மீது பாயும் விவேக்:

இதற்கிடையே விவேக் ஓபராய் மட்டும் தான் சுனாமி நிவாரணப் பணிகள் செய்வது போலவும் மற்றவர்கள் எதுவுமே செய்யவில்லைஎன்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்படுவதாக காமெடி நடிகர் விவேக் கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கிடம் விவேக் ஓபராய் மாதிரி நம் நடிகர்கள் சுனாமி பாதித்த மக்களுக்கு உதவவில்லையேஎன்று கேட்டனர்.

அதற்கு அவர் தந்த பதில்:

குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது இந்தியாவிலேயே முதல் நபராக நிவாரணத் தொகை கொடுத்தவர் விஜய்காந்த் தான். அப்போதுவிவேக் ஓபராய் எங்கே இருந்தார்?. விவேக் ஓபராய் செய்த உதவியை வரவேற்போம். மாறாக, விவேக் ஓபராய் மட்டுமே சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதாகக் கூறக் கூடாது என்றார்.தமிழக அரசுக்கு ஓபராய் பாராட்டு:சென்னையில் சுனாமி குறித்த ஓவியக் கண்காட்சியை துவக்கி வைத்து விவேக் ஓபராய் பேசுகையில்,

நகரப் பகுதிகளில் உதவி செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள். கிராமங்களை எல்லோரும் புறக்கணிக்கிறார்கள். இதனால் தான் சுனாமிபாதித்த உள் வாங்கிய கிராமத்தை நான் தத்தெடுத்தேன். பணம் கொடுத்தால் அது ஒழுங்காகப் போய்ச் சேருமா என்ற சந்தேகம் எனக்குஇருந்தது. இதனால் தான் நேரில் களத்தில் இறங்கினேன்.

சுனாமி பாதித்த பகுதிகளில் தமிழக அரசும் ஏராளமான உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. சிறப்பாகவே நிவாணரப் பணி நடக்கிறதுஎன்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X