பொதுக் கூட்டம்: அதிமுக, திமுக போட்டா போட்டி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் 57வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்த அதிமுகஏற்பாடு செய்துள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் தமிழகம்முழுவதும் 4 நாட்களுக்கு பொதுக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
24ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டங்களில் அமைச்சர் பொன்னையன் (மதுரவாயல்), ஓ.பன்னீர் செல்வம் (காஞ்சிபுரம்), சுலோச்சனா சம்பத் (மயிலாப்பூர்), அமைச்சர் ஜெயக்குமார் (ஆந்திரா), ஓ.எஸ்.மணியன்(வேதாரண்யம்), திண்டுக்கல் சீனிவாசன் ( கடலூர்), விசாலாட்சி நெடுஞ்செழியன் ( அனகாபுத்தூர்),செங்கோட்டையன் (ஈரோடு),
தம்பித்துறை (தாம்பரம்), அமைச்சர் வளர்மதி (பூந்தமல்லி), இன்பத்தமிழன் (திருவொற்றியூர்), தளவாய் சுந்தரம்(கும்பகோணம்), தினகரன் (தேனி), ராதாரவி (ஆர்.கே.நகர்), அமைச்சர் விஸ்வநாதன் (கர்நாடகா) உள்ளிட்டோர்கலந்து கொள்கிறார்கள்.
இதேபோல, அமைச்சர் பொன்னையன் 25ம் தேதி திருவல்லிக்கேணியிலும், 26ம் தேதி எழும்பூரிலும், 27ம் தேதிபள்ளிப்பாளையத்திலும் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார்.
அமைச்சர் ஓ.பி. 25ம் தேதி புழல், 26ம் தேதி பூங்கா நகர் ஆகிய இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் பேசவுள்ளார்என அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழகம் முழுவதும் 1,000 பொதுக் கூட்டங்கள் நடத்த திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் அதிமுகவும் பொதுக் கூட்டங்களில் குதித்துள்ளது. ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டங்கள்முடிந்த பின்னரும் அதிமுகவின் பொதுக் கூட்டங்கள் தொடரும் என்று தெரிகிறது.
திமுக எங்கெல்லாம் பொதுக் கூட்டம் போடுகிறதோ அதே இடத்தில் முன்னதாகவோ அல்லது பின்னரோ கூட்டம்போடுவது என்ற முடிவுக்கு அதிமுகவும் வந்துள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications