தர்மபுரி மாணவிகள் எரிப்பு வழக்கு: அரசுக்கு நீதிபதி மீண்டும் டோஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தர்மபுரியில் 3 கல்லூரி மாணவிகள் அதிமுகவினரால் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கு விசாரணையில் தமிழக அரசுஅலட்சியமாக நடந்து கொள்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜ் மீண்டும் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனைவிதித்து சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தத்ை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்றையில்ஈடுபட்டனர்.

தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் வந்த பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் 3மாணவிகள் உயிருடன் எரிந்து சாம்பலாயினர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைநடந்து வந்தது. 31 அதிமுகவினர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தவிசாரணை உல்டா புல்டா ஆனது.

ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக விசாரணை நடந்து வருவதாக கூறி இறந்த மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை வீராசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ் கடந்த 2003ம் ஆண்டு, வழக்கை சேலம் விரைவு நீதிமன்றதிதற்கு மாற்றிஉத்தரவிட்டார். அங்கும் இந்த வழக்கு இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளது.

காரணம், இந்த வழக்குக்காக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞருக்கு தமிழக அரசு இரண்டு வருடமாகியும்இன்னும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரே தரவில்லை.

இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் கோகிலவாணியின் தந்த வீராசாமி அவமதிப்பு வழக்குதொடர்ந்துள்ளார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கனகராஜ், விசாரணையை தாமதப்படுத்தி வருவதற்காகதமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜாரன வழக்கறிஞர், பஸ் எரிப்பு வழக்கு தொடர்பான முக்கிய ஆவண கட்டுகள்தொலைந்து போய் விட்டதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதனால் கோபமடைந்த நீதிபதி, இந்த வழக்கின் ஆவணங்களை 3 நாட்களுக்குள் போலீசார் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். இல்லாவிட்டால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

இந்த மனு மீது இன்றும் நீதிபதி கனகராஜ் விசாரணை நடத்தினார். அப்போது, மிகவும் முக்கியமான இந்த வழக்கைஅரசுத் தரப்பு இவ்வளவு அலட்சியமாகவும், அக்கறையில்லாமலும் நடத்தி வருவதற்கு கடும் கண்டனம்தெரிவித்தார்.

வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நாளிலிருந்து இன்று வரை வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்டநடவடிக்கைகள், வழக்கு விசாரணையை காலதாமதம் செய்ததற்கான காரணங்கள் ஆகியவற்றை அறிக்கையாக,உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றம் உத்தரவிட்ட நாளிலிருந்து இன்று வரை அந்தந்த காலகட்டத்தில் உள்துறை செயலாளர்களாகஇருந்தவர்கள் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி கனகராஜ், வழக்குவிசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+