ரவியை மிரட்டிய விவகாரம்: நசீமாவுக்கு முன் ஜாமீன்
செங்கல்பட்டு:
ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் பெண் வழக்கறிஞர் நசீரா பானுவுக்கு செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம்நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் கிளைச் சிறையில் உள்ள ரவி சுப்பிரமணியத்தை சந்தித்து அவருக்கு மிரட்டல் விடுத்ததாக சங்கர மடத்தின் வழக்கறிஞர்களானநசீரா பானு, ரேவதி மற்றும் அவர்களை மிரட்டல் விடுக்கத் தூண்டியதாக வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம் ஆகியோர் மீதுபோலீசார் வழக்குப் பதிவு செய்யவுள்ளனர்.
ரவி சுப்பிரமணியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதனால் மடத்தின் வழக்கறிஞர்கள் கைதாகும் சூழலும், சாட்சிகளைக் கலைக்க முயன்றதால் ஜாமீன் நிபந்தனையை மீறிவிட்டஜெயேந்திரரை ஏன் மீண்டும் கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகலாம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்ப நசீரா பானு முன் ஜாமீன் கோரி செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் அலி, நசீரா பானு கைது செய்யப்பட்டால் ரூ. 5,000 சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர்ஜாமீன்களில் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
நசீமா வெளிநாடுகளுக்கு போகக் கூடாது. புகார் தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சாட்சியங்களைகலைக்க மாட்டேன் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் நசீமாவுக்கு முன் ஜாமீன் வழங்கினார்.
இதற்கிடையே, இந்தப் பிரச்சனை தொடர்பாக காஞ்சிபுரம் தனிப்படை போலீஸாரைக் கண்டித்து கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டிருந்த காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர், வரும் திங்கள்கிழமை முதல் பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications