திமுகவுடன் உறவு தொடரும்: ஜி.கே.வாசன்
டெல்லி:
தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. இப்போதுள்ள கூட்டணியே வரும் சட்டசபைத்தேர்தலையும் கூட்டாக சந்திக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலுக்குப் பின் ஆட்சியில் பங்கு கொடுக்கும்கூட்டணியில்தான் காங்கிரஸ் கட்சி இடம் பெறும் என தொடர்ந்து கூறி வருகிறார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரான இளங்கோவனும் கூட்டணி ஆட்சி குறித்துப் பேசி வருகிறார். காங்கிரஸ் தலைமையில்உத்தரவுப்படியே இவர்கள் இவ்வாறு பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பும், அதிருப்தியும் எழுந்துள்ளது.
இந் நிலையில் டெல்லியில் இருக்கும் வாசனிடம் இதுகுறித்துக் கேட்டபோது,
திமுகவுடன் கூட்டணியை முறிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்போதுள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் எந்தமாற்றமும் இருக்காது. வரும் சட்டசபைத் தேர்தலையும் கூட்டாகவே சந்திப்போம்.
கூட்டணியில் மாற்றம் வரும், பிளவு வரும் என்ற சந்தேகத்திற்கே இடமில்லை. திமுக தலைமையின் தன்னிச்சையான போக்குகுறித்து நான் சோனியா காந்தியிடம் புகார் கூறியதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை.
உண்மையில் நான் சோனியா காந்தியுடன் பேசியதை வெளியில் கூற முடியாது. காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும், பிரதேசதலைவர்களுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை எப்படி வெளியில் சொல்ல முடியும் என்றார் வாசன்.
ஆனால், சுதர்சன நாச்சியப்பன் கூறி வரும் கூட்டணி ஆட்சி கோரிக்கை குறித்து வாசன் எந்தவித மறுப்பையும் தெரிவிக்கவில்லை.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications